Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை-திருவண்ணாமலை, சேலம்-மயிலாடுதுறை MEMU ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – பயணிகள் மகிழ்ச்சி!

சென்னை-திருவண்ணாமலை, சேலம்-மயிலாடுதுறை MEMU ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – பயணிகள் மகிழ்ச்சி!

சென்னை கடற்கரை-திருவண்ணாமலை, சேலம்-மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இயங்கி வரும் MEMU ரயில்களை தமிழக மக்கள் வெகுவாக உபயோகிப்படுத்தி வருகின்றனர். ஆனால், பெருகிவரும் மக்கள்தொகை மற்றும் மலிவு விலையில் பொதுப் போக்குவரத்திற்கான தேவை அதிகரித்து வருவது, பீக் ஹவர்ஸில் கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கிறது. சாலை போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க அதிகமான மக்கள் MEMU ரயில்களை நம்பியிருப்பதால், பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த கூடுதல் பெட்டிகளின் தேவை மிகவும் முக்கியமானது. அந்த வகையில் சென்னை-திருவண்ணாமலை உட்பட 5 மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் தற்போது சேர்க்கப்படவுள்ளது!

மெமு ரயில்களில் நிரம்பி வழியும் கூட்டம்

சென்னையில் மற்றும் தமிழகத்தின் பிற மெமு ரயில்களில் தினசரி பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குறிப்பாக நகரின் புறநகர் பகுதிகள் விரிவடைவதால் கூடுதல் பெட்டிகள் தேவைப்படுகின்றன. இந்த கூடுதல் ரயில் பெட்டிகள் விடுமுறை நாட்கள், பண்டிகைகள் மற்றும் வேலை நாட்களில் அதிக நெரிசலைக் கட்டுப்படுத்தவும், கூட்ட நெரிசலைக் குறைக்கவும், தினசரி பயணிகளுக்கு மிகவும் வசதியான மற்றும் திறமையான பயண அனுபவத்தை வழங்கவும் உதவுகின்றன.

சென்னை-திருவண்ணாமலை உட்பட 5 ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

மேம்படுத்தப்பட்ட ரயில் சேவைகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், ஐந்து மெமு எக்ஸ்பிரஸ் ரயில்களின் திறனை 50% அதிகரிக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த குறிப்பிடத்தக்க அதிகரிப்பு சென்னை கடற்கரை-திருவண்ணாமலை, சேலம்-மயிலாடுதுறை, அரக்கோணம்-சேலம், சென்னை கடற்கரை-மேல்மருவத்தூர் மற்றும் மேல்மருவத்தூர்-விழுப்புரம் வழித்தடங்களில் செல்லும் ரயில்களின் பெட்டிகள் 8-ல் இருந்து 12 பெட்டிகளாக மேம்படுத்தப்படும்

additionalcoachesareaddedinfivetrains1

கூடுதலாக 1,200 பயணிகள் செல்லலாம்

தொடர்ச்சியான பொதுமக்களின் கோரிக்கைக்குப் பிறகு, இந்த ரயில்களை 8 முதல் 12 பெட்டிகளாக அதிகரிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் இனி வரும் பயணங்களில் ஒரு பயணத்திற்கு கூடுதலாக 1,200 பயணிகள் செல்லலாம். முதலில் பயணம் செய்து வந்த 2,400 பேர் என்ற மொத்த எண்ணிக்கை தற்போது முதல் 3,600 பயணிகளாக அதிகரிக்கும். அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி, திருத்தப்பட்ட ரேக் கலவை அக்டோபர் 1 முதல் 10 வரை அமலுக்கு வரும்.

திருவண்ணாமலைக்கு செல்லும் பயணிகளின் பயணச் சுமை குறையும்

சென்னை கடற்கரை-திருவண்ணாமலை மற்றும் சேலம்-மயிலாடுதுறை வழித்தடங்களில் மெமு ரயில்கள் முழு திறனுடன் இயக்கப்படுவதால், மேம்படுத்தப்பட்ட ரேக்குகள் மற்றும் கூடுதல் ரயில்களை பயணிகள் கோருகின்றனர். இந்த மாற்றம் திருவண்ணாமலைக்கு செல்லும் பயணிகளின் பயணச் சுமையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் குறிப்பிடத்தக்க பண்டிகைகள் போன்ற உச்ச நேரங்களில் திருவண்ணாமலைக்கு பயணிக்கும் பயணிகளுக்கு கூட்டம் அதிகமாக உள்ளது.

additionalcoachesareaddedinfivetrains2

அவதிக்குள்ளாகியு ரயில் பயணிகள்

சென்னை கடற்கரை-வேலூர் மெமு பயணிகள் சேவை மே 3 அன்று திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டது. எட்டு பெட்டிகள் மட்டுமே உள்ள இந்த ரயிலில் சென்னை கடற்கரை மற்றும் வேலூர் இடையே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியவில்லை, பலர் வாலாஜாவிலிருந்து சென்னை கடற்கரை வரை நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, இதனால் மக்கள் பலரும் மிகவும் அவஸ்தைப்பட்டனர், இது நிலைமையை மோசமாக்கியது.

முடிவை வரவேற்ற பயணிகள்

இதேபோல், டெல்டா பகுதி பயணிகளும், சேலம் - மயிலாடுதுறை விரைவு ரயிலை, 8 பெட்டிகள் கொண்ட மெமு ரேக்குகளை மேம்படுத்த வேண்டும் என, நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்ததால், தற்போது இந்த செய்தி கேட்டு நிம்மதியடைந்துள்ளனர். இந்த பகுதி மக்கள் மட்டுமல்ல, தமிழக மக்களுக்கே இது நற்செய்தி தான்!

More News

    Read more about: chennai news tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+