Search
  • Follow NativePlanet
Share
» »திருப்பதி லட்டுவில் மீன் எண்ணெய், விலங்கு கொழுப்பு – ஆண்டு ஆண்டு காலமாக நடந்து வந்த பெரிய மோசடி!

திருப்பதி லட்டுவில் மீன் எண்ணெய், விலங்கு கொழுப்பு – ஆண்டு ஆண்டு காலமாக நடந்து வந்த பெரிய மோசடி!

படிப்பதற்கே ஒரு மாதிரி இருக்கின்றது அல்லவா? கலியுக வரதனாக எம்பெருமாள் திருப்பதியில் வாசம் செய்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் என்று இந்து புராணங்கள் கூற, அப்படிப்பட்ட ஒரு இடத்தில் பகவான் பெயரில் கொடுக்கப்படும் பிரசாதத்தில் கலப்படமா? அதுவும் சாதாரண கலப்படம் அல்ல. திருப்பதி லட்டு ஆய்வு செய்யப்பட்டதில் அதில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு ஆகியவை கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் பாமாயில் கலந்து இருப்பதும் அதில் உறுதி செய்யப்பட்டுள்ளது!

முன்னாள் முதல்வர் ஆட்சியில் திருப்பதி லட்டுவில் கூட ஊழலா

ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முந்தைய ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பை கலந்ததாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார்.

தரமற்ற பொருட்களால் தயாரிக்கப்பட்ட திருப்பதி லட்டு

இதுதொடர்பாக அமராவதியில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், "ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டுகூட தரமற்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டது. நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தினார்கள். தற்போது தூய நெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோவிலில் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டு, தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது" என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.

adulterationintirupatiladdu

லட்டுவில் மீன் எண்ணெய், விலங்கு கொழுப்பு

திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் மாட்டுக் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் இருப்பதாக ஆய்வக அறிக்கை உறுதி செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கால்நடை தீவனம் மற்றும் பால் மற்றும் பால் பொருட்களை சோதனை செய்வதில் கவனம் செலுத்தும் தனியார் ஆய்வகமான கால்நடை மற்றும் உணவியல் பகுப்பாய்வு மற்றும் கற்றல் மையத்தின் (NDDB CALF) அறிக்கையின் படி, திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யின் மாதிரிகளில் பாமாயில், மீன் எண்ணெய், மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றிக்கொழுப்பு உள்ளிட்ட கொழுப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.

மாட்டிறைச்சி கொழுந்து மற்றும் பன்றிக்கொழுப்பு நிறைந்த நெய்

லட்டு தயாரிப்பதற்காக TTD ஒரு நாளைக்கு 15 கிலோ பசு நெய்யை பயன்படுத்துகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ஏஆர் ஃபுட்ஸ் நிறுவனம், ஒரு கிலோவுக்கு ரூ.320 என்ற விலையில் நெய்யை வழங்குகிறது. இந்த நெய் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுந்து மற்றும் பன்றிக்கொழுப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது ஒரு பன்றியின் கொழுப்பு திசுக்களை வழங்குவதன் மூலம் பெறப்பட்ட அரை-திட வெள்ளை கொழுப்பு தயாரிப்பு ஆகும். கூட்டணி அரசாங்கம் NDDB இன் CALF க்கு மாதிரிகளை அனுப்பிய பிறகு இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது," என்று திரு. ரமண ரெட்டி கூறினார்.

adulterationintirupatiladdu claims

தேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய விஷயம்

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான கோவிலில் வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய்யை உபயோகித்ததாக எழுந்துள்ள புகார் பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக தான் அப்போதே எச்சரித்ததாகவும், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என கோவிலின் முன்னாள் தலைமை அர்ச்சகர் கூறியுள்ளார். எது எப்படி இருந்தாலும், உலகப் பிரசித்திப் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரசாதத்தில் இப்படி ஒரு கலப்படம் இருக்குமென்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்!

More News

    Read more about: tirupati news tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+