Search
  • Follow NativePlanet
Share
» »இந்த தெற்காசிய நாடுகளுக்கு செல்கிறீர்களா? கொரோனாவுடன் வீடு திரும்புவீர்கள் மக்களே – உஷார்!

இந்த தெற்காசிய நாடுகளுக்கு செல்கிறீர்களா? கொரோனாவுடன் வீடு திரும்புவீர்கள் மக்களே – உஷார்!

இந்தியாவில் இருந்து தெற்காசிய நாடுகளுக்கு மக்கள் அதிக அளவில் பயணம் செய்கின்றனர். பேச்சுலர்களின் தலைநகரான தாய்லாந்து, ஹனிமூன் செல்பவர்களின் ஹாட் ஸ்பாட்டாக இருக்கும் பாலி, கலாச்சாரத்தை கண்டு களிக்க வியட்நாம், மியான்மர், வரலாற்றின் அழகை ரசிக்க கம்போடியா, லாவோஸ், நவீன தொழில்நுட்பத்தின் தலைநகரான சிங்கப்பூர் என இந்தியர்கள் அதிக அளவில் இந்த நாடுகளுக்கு சென்று வருவது வழக்கம். ஆனால் இந்த சமயத்தில் அங்கு சென்றால், நீங்கள் புதிய வகை கொரோனாவுடன் இந்தியா திரும்புவதற்கு அதிக சாத்தியம் உள்ளது மக்களே! உஷார்!

கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்புகள்

கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்புகள்

கொரோனா வைரஸின் புதிய வகையான ஒமிக்ரான் B 7, உலக அளவில் மிக வேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த ஆபத்தான போக்கை சீனா எதிர்கொண்டு வருவதால், உலக சுகாதார அமைப்பு நாட்டின் தற்போதைய தொற்று நோய் நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அதிக ஆபத்தில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் அரசு கவனம் செலுத்தவேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கு மக்களை அனுப்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

அதிகம் பாதிக்கப்படும் தெற்காசிய நாடுகள்

அதிகம் பாதிக்கப்படும் தெற்காசிய நாடுகள்

ஒவ்வொரு ஆண்டும் தாய்லாந்தின் பல்வேறு இடங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான முன்பதிவுகள் உள்ளன. இருப்பினும், மத்திய சுகாதார அமைச்சரின் சமீபத்திய அறிவிப்பில், மக்கள் தங்கள் மனதை மாற்றிக்கொண்டு தங்கள் முன்பதிவுகளை ரத்து செய்கிறார்கள். டிராவல் ஏஜென்சிகள் எதையும் ரத்து செய்யவில்லை என்றாலும், அவை இனிமேல் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மக்கள் தங்கள் விடுமுறையைக் கழிக்க மாற்று இடங்களைக் கண்டுபிடிப்பார்கள். மேலும், அவர்கள் அபுதாபி, மலேசியா, துபாய் மற்றும் வியட்நாம் போன்ற இடங்களை தேர்வு செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. ஹாங்காங், தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடும்போது அனைத்து தெற்காசிய நாடுகளும் மிகவும் பாதிக்கப்பட்ட இடமாக இருக்கிறது.

இந்தியாவில் ஒமிக்ரான்

இந்தியாவில் ஒமிக்ரான்

இந்தியாவில் இதுவரை கடந்த சில மாதங்களில் நான்கு ஒமிக்ரான் B 7 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. குஜராத், ஒரிசா மற்றும் கேரள மாநிலங்களில் பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ஒமிக்ரான் B 7 என்பது கொரோனா ஒமிக்ரானில் இருந்து உருமாறிய வைரஸ் ஆகும். இதனால் காய்ச்சல், உடல்வலி, மூட்டுவலி, இருமல் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிப்படுவார்கள். அதோடு மட்டுமல்லாமல் இது எளிதில் பரவக்கூடிய வைரஸ் ஆகும். கொரோனா வைரஸை விட அதிக வீரியம் வாய்ந்த இந்த வைரஸை நாம் மிகவும் கவனமாக எதிர்க்கொள்ள வேண்டும் என உலக சுகாதார மையம் கூறியுள்ளது.

சர்வதேச பயணிகளிடம் ஆர்டி-பிசிஆர் (RT-PCR)

சர்வதேச பயணிகளிடம் ஆர்டி-பிசிஆர் (RT-PCR)

உலகெங்கிலும் உள்ள புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகளின் சமீபத்திய அதிகரிப்பை மனதில் வைத்து, இந்திய சுகாதார அமைச்சகம் சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் ஆர்டி-பிசிஆர் (RT-PCR) பரிசோதிதப்பது இப்போது கட்டாயம் என்று அறிவித்துள்ளது. சோதனைகளின் முடிவில் ரிசல்ட் பாசிடிவ் என்று வந்தால் பயணிகள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

விமான நிலையங்களில் எச்சரிக்கை

விமான நிலையங்களில் எச்சரிக்கை

மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளும் ஏர் சுவிதா படிவத்தை பூர்த்தி செய்து தங்களின் தற்போதைய உடல்நிலையை தெரிவிக்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி, டெல்லி மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களில் சர்வதேச பயணிகளின் சோதனை தொடங்கப்பட்டுள்ளது, மேலும் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே கோவிட்-19 சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன. சீனாவில் COVID-19 வழக்குகள் அதிகரித்து வருவதால், இந்தியாவில் உள்ள அதிகாரிகள் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+