Search
  • Follow NativePlanet
Share
» »இந்திய மிடில் கிளாஸ் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க பூட்டானுக்கு விருப்பமில்லையா? தகவல்கள் இங்கே!

இந்திய மிடில் கிளாஸ் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க பூட்டானுக்கு விருப்பமில்லையா? தகவல்கள் இங்கே!

'இந்தியர்கள் நம் நாட்டிற்கு வரவேண்டாம்' என்று மறைமுகமாக பூட்டான் சொல்கிறதா? ஆம்! இமயமலையின் சாரலில் அமைந்து இருக்கும் அழகிய நாடான பூட்டான் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் 23 முதல் சுற்றுலாப் பயணிகளுக்கான எல்லைகளைத் திறப்பதாக அறிவித்து இருந்தது. ஆனால் அதை நினைத்து சந்தோஷப்படும் படியான விஷயம் எதுவும் இல்லை.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் தகவல்படி, எஸ்.டி.எஃப் என்றழைக்கப்படும் நிலையான அபிவிருத்தி கட்டணம் இந்திய சுற்றுலாப் பயணிகளிடம் 1,200 ரூபாயும், பிற நாட்டவர்களிடம் 16,000 ரூபாயும் நாளொன்றுக்கு வசூலிக்க இருப்பதாக பூட்டான் சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. இந்த அதிக வரி மற்ற பயண செலவுகள், ஹோட்டல் முன்பதிவு போன்றவற்றின் மீது சுமையை அதிகப்படுத்தி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பூட்டான் 'உயர் மதிப்பு, குறைந்த அளவு' என்ற ஃபார்முலாவை தன் சுற்றுலாத் துறையில் பரிசோதிக்க விரும்புகிறது. கொரோனா தொற்றுக்கு பிறகு உலகெங்கிலும் உள்ள சுற்றுலா ஹாட்ஸ்பாட்கள் அறிமுகப்படுத்திய தினசரி வரியை பார்க்கும்போது, பூட்டானின் வரி உலகளவில் மிக உயர்ந்ததாகக் கூறப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, வெனிஸ் அடுத்த ஆண்டிலிருந்து ஒரு நபருக்கான தினசரி கட்டணம் 250 ரூபாய் முதல் 800 வரை கூட்டலாம் என்று பரிசீலித்து வருகிறது.

ஆனால் இந்தியாவில் உள்ள சுற்றுலா நிபுணர்களும் சுற்றுலாத் துறையும் இதனை வேறு விதமாக பார்க்கின்றது. "பூட்டான் இந்தியர்கள் அங்கு வருவதை விரும்பவில்லை, போலும்" அதைத்தான் மறைமுகமாக தெரிவிக்கின்றனரோ என இந்தியா சார்பில் நினைக்க வைக்கின்றது.

bhutan2

"இந்தியாவில் இருந்து பயணிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு எஸ்.டி.எஃப் ஒரு விரும்பத்தகுந்த விஷயமாக அமையவில்லை என்பதே உண்மை. குழு விமான தள்ளுபடிகள், மாணவர்களுக்கான தள்ளுபடிகள் இல்லை, ராயல்டி தள்ளுபடி, குடும்ப சுற்றுப்பயணங்களுக்கான தள்ளுபடிகள் எதுவும் இல்லாத காரணத்தினால் 23,000 ரூபாயில் இருந்த விமான டிக்கெட்டின் விலை 48,000 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது. இது எவ்வளவு பெரிய அபாயம், டிக்கெட் விலை இரட்டிப்பாகியுள்ளது" என்று சுற்றுலாத் துறை நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

இதுநாள் வரை, பூட்டானுக்கு செல்லும் இந்தியர்கள் மீது எந்தவிதமான வரியும் விதிக்கப்படுவது இல்லை. மேலும் நாட்டிற்குள் நுழைய பாஸ்போர்ட் எதுவும் அவசியமில்லை, இந்திய அரசால் வழங்கப்பட்ட அடையாள ஆதாரம் இருந்தாலே போதும். இதற்கு இடையில் ஜூன் 2020 இல், இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது பூட்டான் சுற்றுலாத் துறை கூடுதல் கட்டணம் விதித்தது.

பிற நாட்டு மக்கள் மீது விதிக்கப்படும் அதே அளவு, அதாவது 65 அமெரிக்க டாலர்களில் 12% (சுமார் 600 ரூபாய்) இந்தியப் பயணிகள் மீதும் விதிக்கப்பட்டது. விரைவிலேயே கொரானா தொற்று காரணமாக பூட்டான் கட்டுப்பாடுகள் விதித்து பிற நாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளே வர தடை விதித்தது.

bhutan3

"இந்தியா பூட்டானுடன் வலுவான தூதரக, அரசியல் மற்றும் வர்த்தக உறவுகளைப் பகிர்ந்து கொள்கிறது. எனவே இந்திய சுற்றுலாப் பயணிகள் மீதான இந்த வரியை இந்தியா வரவேற்க தயங்குகிறது. ஆகவே, இந்தியாவிற்கு வருகை தரும் பூட்டான் சுற்றுலாப் பயணிகள் மீது நாமும் அதே போல வரி விதிப்பது தான் நல்லது எனவும் அதுவே இதை எதிர்ப்பதற்கான சிறந்த வழி" எனவும் நிபுணர் ஒருவர் பரிந்துரைத்தார்.

கொரானா தொற்றால் பூட்டானுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. 2020 ஆம் ஆண்டில் பூட்டானுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முன்பை விட 90% குறைவாகவே பதிவானது. அந்த ஆண்டு பூட்டானுக்கு வந்த 29,812 சுற்றுலாப் பயணிகளில் 22,298 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆகும்.

இந்த 1,200 ரூபாய் எஸ்.டி.எஃப் இந்தியப் பயணிகள் மீது விதிக்கப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதுவரை இந்தியாவிலும் பூட்டானிலும் சுற்றுலாத் துறை ஏற்ற இறக்கமாக தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+