Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை பீச்-செங்கல்பட்டு இடையே புதிய ஏசி ரயில்கள் அறிமுகம் – எப்போது தொடங்கப்படும்?

சென்னை பீச்-செங்கல்பட்டு இடையே புதிய ஏசி ரயில்கள் அறிமுகம் – எப்போது தொடங்கப்படும்?

இனி நீங்கள் சென்னைக்குள்ளேயே ஏசி ரயில்களில் பயணிக்கலாம். சென்னையின் பெரும்பாலான மக்கள் உபயோகிக்கும் புறநகர் ரயில் பாதையான சென்னை பீச்-செங்கல்பட்டு இடையே கூடிய விரைவில் ஏசி ரயில் பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அதற்கான புதிய அப்டேட் தற்போது கிடைத்துள்ளது! அதன்படி இன்னும் சில மாதங்களில் நீங்கள் சென்னை புறநகர் ரயிலில் ஏசி பெட்டிகளில் பயணிக்கலாம் என்று தெரிய வந்துள்ளது

சென்னை புறநகர் ரயில் சேவையில் ஏசி ரயில்கள்

சென்னை மக்களில் பெரும்பாலோனோர் உபயோகிக்கும் புறநகர் ரயில் பாதைகளில் சென்னை பீச்-செங்கல்பட்டு பாதை மிகவும் முதன்மையானது. இந்த பாதையில் இயக்கப்படும் ரயில்களில் ஏசி மின்சார பெட்டிகள் இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து ஏசி ரயில்கள் இயக்குவது தொடர்பாக ரயில்வே முடிவு செய்தது. முதலில் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் விரைவில் ஏசி ரயில்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

மலிவான கட்டணத்தில் விரைவான பயணம்

சென்னையின் மிக முக்கிய பொது போக்குவரத்தாக மின்சார ரயில் சேவை விளங்கி வருகிறது. சென்னையின் புறநகர் பகுதிகளுக்குள் மலிவான விலையில் வேகமாக பயணம் செய்வதற்கு மிகவும் உதவிகரமாக இருப்பது இந்த மின்சார ரயில் சேவை தான். புறநகர் பகுதி மக்கள் எளிதில் போக்குவரத்து பயணம் மேற்கொள்ள மின்சார ரயில்கள் பயனுள்ளதாக உள்ளன. அதுவும் இந்த ரயிலில் நீங்கள் வெறும் ரூ.5 குறைந்த பட்ச கட்டணமாக கொடுத்து டிக்கெட் வாங்கி பயணிக்கலாம். இப்போது இந்த ரயிலில் புதிய வசதியுடன் நீங்கள் பயணிக்கப் போகிறீர்கள்!

chennaibeach-chengalpattuaccoaches

தலா 12 பெட்டிகள் கொண்ட ஏசி ரயில்

தலா 12 பெட்டிகள் கொண்ட இரண்டு மின்சார ரயில்களை இயக்க தெற்கு ரயில்வேக்கு ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏசி மின்சார ரயில்களை இயக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏசி மின்சார ரயில் இயக்கப்படும். பின்னர் பயணிகளின் வரவேற்பை தொடர்ந்து படிப்படியாக இந்த ஏசி மின்சார ரயில்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை ஆவடி ஐசிஃஎப் இல் தயாரிக்கப்படும் ரயில்கள்

ரயில்வே வாரியம் இந்த மாத தொடக்கத்தில் தெற்கு ரயில்வேக்கு இரண்டு 12 கார் ஏசி எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் (இஎம்யு) ரேக்குகளை ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது. இன்டெக்ரல் கோச் பேக்டரி (ஐசிஎஃப்) தயாரித்த எட்டு ஏசி எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்களில் (இஎம்யுக்கள்) இரண்டு தெற்கு ரயில்வேக்காக குறிப்பாக நியமிக்கப்பட்டுள்ளன, இது இந்த வழித்தடத்தில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

எதனால் பணிகள் தாமதமாகின்றன?

சென்னைக்கான முதல் ரேக் 2023-24 இல் டெலிவரி செய்ய திட்டமிடப்பட்டது, இரண்டாவது ரேக் அடுத்த ஆண்டில் திட்டமிடப்பட்டது. இருப்பினும், ரயில்வே தொடர்ந்து இழுத்தடித்து வருவதால், தற்போது ஏசி ரயில்களுக்கு அழுத்தம் கொடுத்து, மாநில பட்ஜெட்டில் சேர்க்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும் மெட்ரோ ரெயிலின் சாத்தியக்கூறு ஆய்வு நடத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டனர்.

chennaibeach-chengalpattuaccoaches1

மும்பை ஏசி ரயில்களினால் சென்னைக்கு ஆன தாமதம்

நவம்பர் 2023 இல் ரயில்கள் தொடங்கப்பட்ட மும்பை புறநகர் நெட்வொர்க்கிற்காக தானியங்கி கதவுகளுடன் கூடிய ஏசி புறநகர் ரேக்குகளை ஐசிஎஃப் தயாரித்து வருகிறது. சென்னைக்கான ரேக்குகளை ரயில்வே வாரியம் ஒதுக்க வேண்டும். மும்பை நெட்வொர்க் திட்டம் என்பது ஒரு பிரத்யேக உற்பத்தி திட்டமாகும். அதே போல இது சென்னை பீச்-செங்கல்பட்டு ஏசி ரயில்களுக்கு முன்னர் வந்த திட்டம் என்பதால் அதற்கான வேலைகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் நீங்கள் ஏசி பெட்டிகளில் பயணிக்கலாம்

ஏசி பெட்டிகளுடன் கூடிய மின்சார ரயில்களை சென்னை ரயில்வே கோட்டத்தில், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே முதற்கட்டமாக அறிமுகம் செய்ய முடிவு செய்த நிலையில், தற்போது சோதனை ஓட்டத்திற்காக காத்திருக்கின்றனர். இதற்காக வரும் நவம்பர் மாதத்தில் இதற்கான சோதனை ஓட்டத்தை நடத்த தெற்கு ரெயில்வே முடிவு செய்திருக்கிறது. இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏசி பெட்டிகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

More News

    Read more about: chennai news trvelguide
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+