• Follow NativePlanet
Share
» »வேற லெவலில் மாறப் போகும் சென்னையின் சாலைகள் - சென்னை மாநகரத்தில் பராமரிப்பு பணிகள் துவக்கம்!

வேற லெவலில் மாறப் போகும் சென்னையின் சாலைகள் - சென்னை மாநகரத்தில் பராமரிப்பு பணிகள் துவக்கம்!

சென்னை மாநகரில் பழுதடைந்த சாலைகளை புனரமைக்க சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. நடப்பு 2024-25 நிதியாண்டில் அனைத்து 15 மண்டலங்களிலும் TURIF இன் கீழ் மொத்தம் ரூ.280 கோடி செலவில் சென்னையின் சாலைகளை புணரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2,000 பேருந்து வழித்தடச் சாலைகள் மீண்டும் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 அடி முதல் 15 அடி வரை அகலப்படுத்துவதற்காக, சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (CMDA) மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனால் சென்னை வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்!

Chennai is reconstructing damaged roads

மழைக்காலம் வருவதற்கு முன் சாலைகள் புனரமைப்பு

மழைக்காலம் வருவதற்கு முன்பு, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 2000- க்கும் மேற்பட்ட சாலைகள் போடுவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. 1502 பேருந்து தட சாலைகளும், 1039 உட்புற சாலைகள் என மொத்தம் 3297 சாலைகள் போடப்படுவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. கடந்த 2023 -2024 ஆம் ஆண்டில் 5205 சாலைகள் சீரமைப்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் கிட்டத்தட்ட ரூ.708 கோடியில் மதிப்பிலான சாலை மதிப்பீட்டில் ரூ.543 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மட்டுமே சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

சாலைகளை சீரமைக்க கோரும் நிறுவனங்கள் விண்ணப்பம் செய்யலாம்

அடுத்த மாதம் 7 ஆம் தேதிக்குள் சாலைகளை சீரமைக்க கோரும் நிறுவனங்கள் விண்ணப்பம் செய்யலாம். செப்டம்பர், அக்டோபர் மாத இறுதிக்குள் சாலை பணிகளை முடிக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும். அதிகபட்சமாக வளசரவாக்கம் மண்டலத்தில் 112 பேருந்து தட சாலைகளை சீரமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. திருவொற்றியூரில் 106 பேருந்து தட சாலைகளை சீரமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

Chennai is reconstructing damaged roads

எந்தெந்த சாலைகளில் பராமரிப்பு பணிகள் துவங்கப்படும்

தேர்ந்தெடுக்கப்பட்ட சாலைகளில் அடையாறில் எல்பி சாலை, கீழ்ப்பாக்கம் முதல் வில்லிவாக்கம் வரையிலான NW ஆவடி சாலை, பெரம்பூரில் இருந்து கொளத்தூர் வரை காகித ஆலை சாலை, மெரினா கடற்கரையில் இருந்து ஜெமினி வட்டம் வரை ராதாகிருஷ்ணன் சாலை, கூக்ஸ் சாலை மற்றும் புரசைவாக்கத்திலிருந்து பெரம்பூர் வரை பெரம்பூர் பேரக்ஸ் சாலை ஆகியவை அடங்கும்.

நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவக்கம்

மேயர் ஆர்.பிரியா, சிஎம்டிஏவின் வளர்ச்சி உரிமை நிதியைப் பயன்படுத்தி நான்கு சாலைகள் விரிவுபடுத்தப்படும் என்றும், கொளத்தூர் மற்றும் பெரம்பூர் பேரக்ஸ் சாலை, நீண்ட கால திட்டமான இரண்டு சாலைகள் சென்னை மாநகராட்சி மூலம் நிதியளிக்கப்படும் என்றும் கூறினார். நிலம் கையகப்படுத்துவதற்காக தனியார் சொத்து உரிமையாளர்களுடன் மாநகராட்சி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

Chennai is reconstructing damaged roads

வடசென்னை சாலைகளை விரிவுபடுத்துவது நெரிசலைக் குறைக்கும்

எல்பி சாலை, ஆர்.கே.சாலை மற்றும் பெரம்பூர் பேரக்ஸ் சாலை விரிவாக்கம் செய்ய அதிக நேரம் ஆகலாம். ஆனால், வடசென்னை சாலைகளை விரிவுபடுத்துவது நெரிசலைக் குறைக்க உதவும், மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மாநகர கார்ப்பரேஷன் கூக்ஸ் சாலையை 16 மீ முதல் 22 மீ வரை 240 மீ நீளத்திற்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. கூக்ஸ் சாலைக்கும் ஸ்டீபன்சன் சாலை சந்திப்புக்கும் இடையே ரூ.5.2 கோடி செலவில் பணிகள் துவங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Chennai is reconstructing damaged roads

சாலைகள் மட்டுமல்ல சுரங்கப்பாதைகளும் விரிவுப்படுத்தப்படும்

பேருந்து வழித்தட சாலைகள் துறையின் செயல் பொறியாளர் முருகேசன் கூறுகையில், தற்போதைய விரிவாக்கப் பணிகள் எதிர்காலத்தில் நான்கு வழி மேம்பாலங்களுக்கு வழி வகுக்கும். ஆர்.கே.சாலை மற்றும் எல்.பி., ரோடு அகலப்படுத்தப்பட வேண்டிய அகலத்தை இன்னும் உறுதி செய்யவில்லை, சி.எம்.டி.ஏ., உடனான ஆலோசனைக்கு பின், விரைவில் பணிகள் துவங்கும் என்று கூறினார். நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் அதிக போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, ஜிசிசி நெல்சன் மாணிக்கம் சாலை சுரங்கப்பாதையையும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை அறிந்த சென்னை மக்கள் இந்த செய்தியை வெகுவாக வரவேற்றுள்ளனர்.

More News

    Read more about: chennai tamil nadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+