சென்னைக்கு அருகில் ஒரு மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ள புலிகாட் ஏரி இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உப்பு நீர்நிலையாக ஒவ்வொரு வருடமும் மில்லியன் கணக்கில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக இருக்கிறது. வெளிநாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தரும் பல்லாயிரக்கணக்கான பறவைகளின் தாயகமாக இருக்கும் இந்த சரணாலயம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அழிவை நோக்கி செல்வதாக தெரிகிறது. இதற்காக தமிழக அரசு எடுக்கப் போகும் முடிவு என்ன?
ஆபத்தில் உள்ளதா புலிகாட் ஏரி
புலிகாட் பறவைகள் சரணாலயத்தின் கணிசமான பகுதியை விலக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. பல்லுயிர் பெருக்கம் நிறைந்த பகுதிக்குள் அமைந்துள்ள 13 வருவாய் கிராமங்களில் உள்ள பட்டா நிலம், 1972 ஆம் ஆண்டின் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் உரிமை கோரும் செயல்முறையை முடித்த பிறகு, சரணாலயத்தில் இருந்து விலக்கப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன என்று 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் வெளிவந்துள்ளது.

இரண்டு மாதங்களுக்குள் எழுத்துப்பூர்வ கோரிக்கை
மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிப்ரவரி 29-ஆம் தேதி வரைவு அறிவிப்பை வெளியிட்டார். இரண்டு மாதங்களுக்குள் நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் நிலத்திற்கான எழுத்துப்பூர்வ கோரிக்கையை மக்கள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
ஏற்கனவே அதானி துறைமுகத்தினால் ஏரிக்கு அபாயம்
புலிகாட் பறவைகள் சரணாலயப் பகுதி குறைக்கப்படும்போது, அதன் வடக்கு எல்லை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்கு (ESZ) வெளியே விழும், சர்ச்சைக்குரிய அதானி-காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கான பெரும் தடைகளை இது நீக்கும் என்பதால், தேசிய வனவிலங்கு வாரியத்தின் (NBWL) அனுமதி பெறுவதில் இருந்து திட்டத்திற்கு விலக்கு அளிக்கலாம். காட்டுப்பள்ளி துறைமுகத்தின் விரிவாக்கம் மற்றும் பறவைகள் சரணாலயத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால், நூற்றுக்கணக்கான ஏக்கர் சதுப்பு நிலங்களை கையகப்படுத்துவது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக அரசு ஒரு முடிவு எடுக்க வேண்டும்
1980 ஆம் ஆண்டில், மாநில அரசு பறவைகள் சரணாலயத்தை வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் பிரிவு 18 இன் கீழ் கொண்டு வந்தது. ஆனால் அது இறுதி அறிவிப்பு அல்ல. சரணாலயத்தின் எல்லை இதுவரை வரையறுக்கப்படவில்லை. சட்டத்தின்படி, பிரிவு 26(A)ன் கீழ் இறுதி அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை ஆட்சியர் தீர்த்து வைத்த பின்னரே, அதற்கான நடவடிக்கைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. தனியார் பட்டா நிலங்களை சரணாலயமாக அறிவிக்க முடியாது என வனத்துறை அதிகாரி தெரிவித்தார். அந்த நிலங்களை அரசு கையகப்படுத்த வேண்டும் அல்லது அதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான மக்களுக்கு இன்னும் விஷயம் தெரியவில்லை
திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்க பொதுச்செயலாளர் துரை மகேந்திரன், எம்.சி.சி., நீக்கப்படும் வரை, கோரிக்கை தீர்வை விரைந்து முடிக்கக் கூடாது என, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். "மீனவர்கள் இந்த செயல்முறையைப் பற்றி அறியாமல் உள்ளனர், மேலும் இந்த 13 கிராமங்களில் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். மேலும், தொழில்மயமாக்கலுக்கு உதவும் சரணாலயத்தின் அளவை அரசாங்கம் குறைக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பல்வேறு தரப்பில் இருந்தும் எழும் கோரிக்கைகள்
சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் எம் யுவன் கூறுகையில், எண்ணூர் சிற்றோடை, உப்பங்கழி மற்றும் கொசஸ்தலையாறு ஆகியவற்றுடன் நீரியல் ரீதியாகவும், சூழலியல் ரீதியாகவும் புலிகாட் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஆற்றுப்படுகையின் அனைத்து பகுதிகளுக்கும் மிகுந்த பாதுகாப்பு தேவை என்றார். ESZ இன் குறைப்பு, காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் போன்ற தீங்கு விளைவிக்கும் தொழில்துறை திட்டங்களை காயல் மணல் திட்டை அரித்து, புலிகாட்டின் முழு நீரியல் தன்மையையும் அழிக்க அனுமதிக்கும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.



Click it and Unblock the Notifications





