Search
  • Follow NativePlanet
Share
» »சென்னைக்கு அருகே புதிய நகரம் - IT பார்க் துவங்கி ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வரை - 2,000 ஏக்கர் பரப்பளவு!

சென்னைக்கு அருகே புதிய நகரம் - IT பார்க் துவங்கி ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வரை - 2,000 ஏக்கர் பரப்பளவு!

2025-26 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு பட்ஜெட்டை தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் மார்ச் 14 அன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். பலத்த வரவேற்பை பெற்று வரும் தமிழக அரசு பட்ஜெட்டில் தமிழக மக்களுக்கான பல வித நலத் திட்டங்களும், மேம்பாடுகளும், ஊக்கங்களும் இடம் பெற்று உள்ளன. அவற்றில் சென்னைக்கு அருகே உருவாக்கப்படும் 'குளோபல் சிட்டி' இந்தியா முழுக்க கவனத்தை ஈர்த்துள்ளது! இதற்காக தமிழக சென்னைக்கு அருகில் 2,000 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த புதிய நகரத்தை உருவாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது! இதனால் சென்னை மக்களுக்கு பல தரப்பட்ட நன்மைகள் காத்து கிடக்கின்றன!

Global city

சென்னைக்கு அருகே உலகத்தரத்தில் புதிய சிட்டி

விரைவான நகரமயமாக்கல் காரணமாக ஏற்படும் சவால்களை சமாளிக்கும் முயற்சியாக, சென்னைக்கு அருகில் 2,000 ஏக்கர் பரப்பளவில், 'குளோபல் சிட்டி' அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டம், பொதுமக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை உறுதியளிக்கிறது. இந்த திட்டத்தை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் (டிட்கோ) மேற்கொள்ளும், மேலும் அதற்கான பணிகள் வரும் நிதியாண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சிட்டி உருவாக்க வேண்டியது அத்தியாவசியம்

பட்ஜெட் தாக்கல் செய்தபோது, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மாநிலம் மிக உயர்ந்த நகரமயமாக்கலை அனுபவித்து வருவதாகவும், பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி மற்றும் மதுரை போன்ற நகரங்களுக்கு இடம்பெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறினார். நெரிசலை சமாளிக்கவும், வளர்ச்சிகளை மேம்படுத்தவும், சென்னை மாநகரை விரிவுபடுத்துவது மிகவும் அவசியம் என்பதால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Global city

இதுவே சரியான சாய்ஸ்

நகரங்களை அவ்வப்போது விரிவுபடுத்துவதற்குப் பதிலாக, ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்குவது பொதுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மிகவும் பயனுள்ள அணுகுமுறையாக இருக்கும் என்று நகர்ப்புற திட்டமிடல் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளதாக அவர் கூறினார். இதைக் கருத்தில் கொண்டு, முதல் கட்டத்தில், புதிய நகரம் சென்னைக்கு அருகில் உருவாக்கப்படவுள்ளது.

ஐடி பார்க் துவங்கி ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வரை

இந்த புதிய நகரம் ஐடி பூங்காக்கள், நிதி தொழில்நுட்ப வர்த்தக மண்டலங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், ஷாப்பிங் வளாகங்கள், வர்த்தக மையங்கள் மற்றும் மாநாட்டு அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளைக் கொண்டிருக்கும். இது பொது மற்றும் தனியார் துறை கல்வி மற்றும் சுகாதார வசதிகளையும் வழங்கும்.

கூடிய விரைவில் பணிகள் துவங்கும்

இருப்பினும், இந்த திட்டம் எங்கு செயல்படுத்தப்படும் என்பது குறித்து வெள்ளிக்கிழமை அதிகாரிகள் வாய் திறக்கவில்லை, குறிப்பாக திருமழிசையில் உள்ளதைப் போல முந்தைய ஆண்டுகளில் சில செயற்கைக்கோள் டவுன்ஷிப் திட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், மீஞ்சூர், திருமழிசை, செங்கல்பட்டு, மாமல்லபுரம், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய ஆறு செயற்கைக்கோள் நகரங்களை உருவாக்குவதற்கான வரைபடங்களைத் தயாரிக்கும் திட்டங்களை சிஎம்டிஏ அறிவித்தது.

இன்னும் கூடிய விரைவில் இடம் தேர்வு செய்யப்பட்டு, குளோபல் சிட்டி அமைப்பதற்கான பணிகள் துவங்கும்! இதைப்பற்றிய உங்களுடைய கருது என்ன என்று கமெண்ட் பாக்சில் கூறுங்கள்!

More News

    Read more about: chennai travel news tamil nadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+