Search
  • Follow NativePlanet
Share
» »என்ன சொல்றீங்க?...சென்னை டூ புதுச்சேரி இனி வெறும் 20 நிமிடத்தில் போகலாமா?

என்ன சொல்றீங்க?...சென்னை டூ புதுச்சேரி இனி வெறும் 20 நிமிடத்தில் போகலாமா?

என்னங்க...சென்னை டூ புதுச்சேரி வெறும் 20 நிமிடத்தில், ஹைவேசில் இனி பறக்கலாம் என்றால் உங்களால் நம்ம முடியவில்லையா? அட உண்மை தாங்க. சென்னை டூ புதுச்சேரி பயணம் இனி ரொம்பவே ஜாலியாக, விரைவான பயணமாக மாற போகிறது. எப்படி என வாங்க தெரிந்து கொள்ளலாம்.

Expressway

மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து புதுச்சேரி வரை 46 கி.மீ தூரத்திற்கு சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த கிழக்கு கடற்கரை சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும். இதற்கான டெண்டரை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) விரைவில் கோர உள்ளது. இந்த விரிவாக்கப் பணியின் மூலம்சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு 20 நிமிடங்களில் செல்ல முடியும். சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் வாகன நெரிசல் அதிகமாக இருப்பதால், இந்த விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

Expressway

சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் நாளுக்கு நாள் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறவில்லை. ஆனால் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. வார இறுதி நாட்களில் சென்னையில் இருந்தும், மற்ற பகுதிகளில் இருந்தும் புதுச்சேரிக்கு அதிக அளவில் மக்கள் செல்வதால் அசம்பாவிதங்கள் நேரிடுகின்றன.

கிழக்கு கடற்கரை சாலையை விரிவாக்கம் செய்ய NHAI திட்டமிட்டுள்ளது. மாமல்லபுரம் முதல் புதுச்சேரி - விழுப்புரம் மார்க்கத்தில் உள்ள ஆழியூர் கிராமம் வரை 105 கி.மீ தூரத்திற்கு மூன்று கட்டங்களாக பணிகள் நடக்க உள்ளன. மாமல்லபுரம் - முகையூர் இடையே 23 கி.மீ., முகையூர் - மரக்காணம் இடையே 36 கி.மீ., மரக்காணம் - ஆழியூர் இடையே 46 கி.மீ. தூரத்திற்கு சாலை விரிவாக்கம் செய்யப்படும். இந்த சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும்.

இந்த பணிகள் முடிந்தால் மாமல்லபுரம் - புதுச்சேரி (ஆழியூர்) பயண நேரம் 90 நிமிடங்களாக குறையும். முதல் கட்டமாக மாமல்லபுரம் - முகையூர் சாலை டிசம்பர் 2024-ல் திறக்கப்பட்டது. இரண்டாவது கட்டமாக முகையூர் - மரக்காணம் சாலை டிசம்பர் 2025-ல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். மூன்றாவது கட்டமாக மரக்காணம் - ஆழியூர் சாலைக்கான டெண்டர் கோரப்பட்டு ஜூன் மாதம் இறுதியில் பணிகள் தொடங்கப்படும்.

மூன்று கட்டங்களில் மரக்காணம் - புதுச்சேரி (ஆழியாறு) சாலைப் பகுதிக்கு அதிக செலவாகும். இந்த சாலை அமைக்க ரூ.1,605 கோடி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்துவதற்கு அதிக பணம் தேவைப்பட்டது. சாலையின் திட்டத்திலும் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலை அமைக்க வேண்டும். ஏனெனில், அந்த பகுதியில் பறவைகள் சரணாலயம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது. "சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலை அமைக்க வேண்டும்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மரக்காணம் பகுதியில் பக்கிங்காம் கால்வாய் இருப்பதால் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி தற்போது முடியும் தருவாயில் உள்ளது. சென்னை - புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் முடிந்தால், மக்கள் குறைந்த நேரத்தில் பயணம் செய்யலாம். இந்த சாலை, அதிவேகமாக செல்லும் சாலையாக மாற்றப்படும். பணிகள் முடிந்தால் வாகனங்கள் 100 கி.மீ வேகத்தில் செல்லலாம். கிராமப்பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் கால்நடைகள் சாலையின் குறுக்கே செல்ல முடியாதபடி சாலை கட்டமைப்பு இருக்கும். இதனால் விபத்துகள் தவிர்க்கப்படும்.

கூனிமேடு முதல் புதுச்சேரி வரை 31 கி.மீ தூரத்திற்கு ஆறு வழி சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த பணி முடிந்தால் புதுச்சேரிக்குள் வாகன நெரிசல் குறையும். தற்போது கடலூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல ECR வழியாக வரும் வாகனங்கள் புதுச்சேரி நகரத்திற்குள் சென்றுதான் செல்ல வேண்டும். ஆறு வழி சாலை முடிந்தால் அரியூர் வழியாக செல்லும் வாகனங்கள் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் இணைக்கப்படும். இதனால் புதுச்சேரி நகரத்திற்குள் செல்லாமல் கடலூர் போன்ற பகுதிகளுக்கு விரைவாக செல்ல முடியும். இதன் மூலம் பயண நேரம் மிச்சமாகும். இந்த சாலை விரிவாக்கப் பணியால் கிழக்கு கடற்கரை சாலையில் பயணம் செய்வது எளிதாகும். நேரமும் மிச்சமாகும்.

More News

    Read more about: chennai puducherry tamil nadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+