• Follow NativePlanet
Share
» »கிடப்பில் போடப்பட்ட சிந்தாதிரிப்பேட்டை-சென்னை கடற்கரை புறநகர் ரயில் சேவை – தவிக்கும் பொதுமக்கள்!

கிடப்பில் போடப்பட்ட சிந்தாதிரிப்பேட்டை-சென்னை கடற்கரை புறநகர் ரயில் சேவை – தவிக்கும் பொதுமக்கள்!

சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூர் வரை நான்காவது ரயில் பாதை அமைப்பதற்காக சிந்தாதிரிப்பேட்டையில் மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் (MRTS) சேவையை தெற்கு ரயில்வே துண்டித்து சரியாக ஒரு வருடம் நான்கு மாதங்கள் ஆகிறது. இதனால் சென்னை கடற்கரைக்கும் சிந்தாதிரிப்பேட்டைக்கும் இடையேயான புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இதனால் தினசரி நூற்றுக்கணக்கான பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். இதனுடைய புதிய அப்டேட் ஏதாவது வந்துள்ளதா என்று பார்ப்போம்!

ஓராண்டுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில் பாதை

சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே 4.3 கிமீ நான்காவது பாதை அமைப்பதற்கு வசதியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி சேவைகள் நிறுத்தப்பட்டன. ஏப்., 1ம் தேதிக்குள் பணிகள் துவங்கும் நிலையில், ஏழு மாதங்களில் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டது. சென்னை கடற்கரைக்கும் சிந்தாதிரிப்பேட்டைக்கும் இடையிலான MRTS சேவைகள் நிறுத்தப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும், மீண்டும் தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இதனால் தினசரி நூற்றுக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், குறிப்பாக வடசென்னையிலிருந்து வேளச்சேரி மற்றும் திருவான்மியூர் செல்லும் அலுவலகம் செல்பவர்கள், பேருந்து அல்லது கால்டாக்சிக்கு மாற வேண்டியுள்ளதால், பயண நேரமும் அதிகரிக்கிறது.

முன்னேற்றம் இல்லாமல் தேங்கி நிற்கும் பணிகள்

பலமுறை காலக்கெடு நீட்டிக்கப்பட்ட போதிலும், அக்டோபர் 1ம் தேதிக்குள் பணிகள் முடிவடையும் என சென்னை கோட்டம் ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. இருப்பினும், தாமதம் தொடர்வதால், தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ரயில்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, கடற்கரையிலிருந்து 110 மீ தூரத்தை மாற்றுவது தொடர்பான பிரச்சினை தீர்க்கப்பட்டு வருகிறது, மேலும் புதிய பாதை முடியும் தருவாயில் உள்ளது. இவர்கள் இப்படி கூறினாலும் பணிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை.

Chintadripet-Chennai beach MRTS line work is not completed yet

தொடர்ந்து அவதிப்படும் பொதுமக்கள்

திருவள்ளூர், அரக்கோணம், ஆவடி போன்ற பகுதிகளில் இருந்து சென்னை கடற்கரையில் வேளச்சேரி செல்லும் எம்ஆர்டிஎஸ் ரயிலில் ஏறும் பயணிகள் இனி சென்னை சென்ட்ரல் செல்லும் ரயிலில்தான் செல்ல வேண்டும். அவர்கள் மீண்டும் தங்கள் இலக்கை அடைய சிந்தாதிரிப்பேட்டை வரை பயணிக்க வேண்டும். குறிப்பாக மழை மற்றும் பீக் ஹவர்ஸில் சென்ட்ரலில் இருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு செல்வது மிகவும் கடினம்.

அதிக கட்டணம் கொடுத்து செல்லும் மக்கள்

கொட்டிவாக்கம், நீலாங்கரை போன்ற பகுதிகளில் இருந்து அடிக்கடி விம்கோ நகர் மற்றும் திருவொற்றியூர் செல்லும் மக்களுக்கு இப்போது நேரடி MRTS இணைப்பு இல்லை. அண்ணா நூலகத்திற்குச் செல்பவர்களும் பேருந்துகளில் செல்ல வேண்டும், இது நெரிசலான நேரத்தில் அவர்களின் பயண நேரத்தை ஒரு மணி நேரத்திற்கு மேல் சேர்க்கிறது. அதுமட்டுமல்ல, சரியான நேரத்தில் செல்ல வேண்டும் என்பதற்காக ஆட்டோ எடுத்தால் அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Chintadripet-Chennai beach MRTS line work is not completed yet 2

விரைந்து பணியை முடித்தால் நன்றாக இருக்கும்

நான்காவது பாதை ரூ.243 கோடிக்கு மேல் செலவில் போடப்படுகிறது. இத்திட்டம் நிறைவேறியதும், எழும்பூர் மற்றும் தாம்பரத்தில் இருந்து அஞ்சல் மற்றும் விரைவு ரயில்களை இயக்கவும், டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரலில் இயக்கப்படும் நெரிசலைக் குறைக்கவும் உதவும். தெற்கு ரயில்வே இதனை நிறைவேற்றுவதாக உறுதியளித்தது. ஆனால் இன்று வரை என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. விஷயம் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது சென்னை மக்களுக்கு வருத்தமளிக்கிறது.

More News

    Read more about: chennai news mrts
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+