Search
  • Follow NativePlanet
Share
» »கோயம்புத்தூர் சாய்பாபா காலனி மேம்பாலம் நீட்டிப்பு – ஆய்வு செய்து வரும் NHAI!

கோயம்புத்தூர் சாய்பாபா காலனி மேம்பாலம் நீட்டிப்பு – ஆய்வு செய்து வரும் NHAI!

சென்னைக்கு அடுத்ததாக மிகப்பெரிய நகரமாக தொழில், வணிகம், சுற்றுலா, வியாபாரம், கல்வி என வளர்ந்து வரும் நகரமான கோயம்புத்தூரை கட்டுமானத்தில் மேம்படுத்துவது அவசியமாக இருந்து வருகிறது. அதன் ஒரு படியாக கோவையில் கூடிய விரைவில் மெட்ரோ சேவைகள் துவங்கவிருக்கிறது. இதற்கான முதற்கட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கிய நிலையில், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி மேம்பாலத்தை நீட்டிப்பது குறித்து சாத்தியக்கூறு ஆய்வை மாநில நெடுஞ்சாலைத் துறையின் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு மேற்கொள்ள உள்ளது!

Flyover

கோவையில் கால் எடுத்து வைக்கும் மெட்ரோ ரயில்

சென்னைக்கு அடுத்தப்படியாக வேகமாக வளர்ந்து வரும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் கோயம்புத்தூர் முதன்மை இடம் வகிக்கிறது. தொழில்துறை, சுற்றுலா, கட்டுமானம் என தமிழகத்தின் மான்செஸ்டராக விளங்கும் கோயம்புத்தூரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதும், அணுகலை மேம்படுத்துவதும் மிகவும் மிகவும் பிரதானமாகும். அதனால் கோவை மெட்ரோ ரயில் சேவை மூலம் தற்போது இணைக்கப்படவிருக்கிறது. இதற்கான முதற்கட்ட பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், தற்போது CMRL கோவையில் நிலம் கையகப்படுத்த ரூ.154 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது!

ஆய்வு மேற்கொள்ளும் இந்திய தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு

இந்நிலையில், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி மேம்பாலத்தை நீட்டிப்பது குறித்து சாத்தியக்கூறு ஆய்வை மாநில நெடுஞ்சாலைத் துறையின் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு மேற்கொள்ள உள்ளது. மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மாவட்ட வன அலுவலகம் அருகே உள்ள அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் வரை மேம்பாலத்தை நீட்டிக்க வேண்டும் என்று பல அமைப்புகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Flyover

இதுவரை கட்டி முடிக்கப்பட்டுள்ள 10 தூண்கள்

மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகளை தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் திட்டத்தை முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதிகாரிகள் இதுவரை இந்தப் பகுதியில் சுமார் 10 தூண்களை கட்டி முடித்துள்ளனர், மேலும் திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற உள்ளனர்.

மேம்பாலத்தை நீட்டிக்க கோரிக்கை

திட்டம் வேகமாக வளர்ந்து வருவதால், உள்ளூர்வாசிகள், வாகன ஓட்டிகள் மற்றும் கோவை நகர முனிசிபல் கார்ப்பரேஷனின் (CCMC) அதிமுக மன்றத் தலைவர் பிரபாகரன் மற்றும் பலர் நீலகிரிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் உட்பட மக்கள் பயனடையும் வகையில் மேம்பாலத்தை நீட்டிப்பது குறித்து பரிசீலிக்குமாறு NH அதிகாரிகளை வலியுறுத்தினர்.

தனி விரிவான திட்ட அறிக்கை விரைவில்

இந்த சூழலில், சாய்பாபா காலனி மேம்பாலத்தை நீட்டிப்பது குறித்து சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தேசிய நெடுஞ்சாலை பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர், "சாய்பாபா காலனி மேம்பாலத்தை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும். அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் வரை மேம்பாலத்தை நீட்டிப்பதற்கான விருப்பங்களை ஆராய ஒரு சாத்தியக்கூறு ஆய்வை நாங்கள் நடத்துவோம். நடப்பு நிதியாண்டு (FY) 24-25 முடிவடைவதால், நீட்டிப்பு பணிகள் வரவிருக்கும் நிதியாண்டு 25-26 இல் மேற்கொள்ளப்பட்டு, தனி விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்" என்று கூறினார்.

முதற்கட்ட மெட்ரோ நிதியாக ரூ.154 கோடி ஒதுக்கீடு

கோயம்புத்தூர்-சத்தியமங்கலம் சாலையில் 1.1 கி.மீ நீளமுள்ள கோயம்புத்தூர் மெட்ரோவிற்கான நிலம் கையகப்படுத்துதலுக்காக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) முதல் கட்டமாக ரூ.154 கோடியை ஒதுக்கியுள்ளது. டெக்ஸ்டூல் பாலத்திலிருந்து சூர்யா மருத்துவமனை வரை 1.2 கி.மீ தூரத்திற்கு சாத்தி சாலையில் சுமார் 24 மீட்டர் நிலத்தை CMRL கையகப்படுத்தும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+