Search
  • Follow NativePlanet
Share
» »திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இவ்வளவு தங்கமா – அடேங்கப்பா! மலை மலையாய் தங்க குவியல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இவ்வளவு தங்கமா – அடேங்கப்பா! மலை மலையாய் தங்க குவியல்!

சுமார் இரண்டரை லட்ச கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கும் திருமலை திருப்பதி ஏழுமலையான் கிட்ட எவ்வளவு தங்கள் இருக்கிறதுன்னு உங்களுக்கு தெரியுமா? உலகிலேயே மிகவும் பணக்கார இந்து கோவிலாக திகழும் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு பக்தர்கள் வெள்ளி, தங்கம், பணம் என காணிக்கைகளை வாரி வழங்குகின்றனர். அந்த வகையில் நாளுக்கு நாள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு காணிக்கையாக வரும் தங்கத்தின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது! ஆம்! உலகிலேயே அதிக தங்கத்தினை கொண்ட கடவுள் என்றால் அது நம் ஏழுமலையான் தான்!

பல ஆண்டுகளாக காணிக்கை செலுத்தும் பழக்கம்

ஆந்திரப் பிரதேசத்தில் கி.பி 300 இல் கட்டப்பட்ட திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற ஏழுமலையான் கோவிலுக்கு யாத்திரை செல்லும் பக்தர்கள், மஞ்சள் தூள் கொண்டு உலர்த்தப்பட்ட மஞ்சள் துணியில் இறுக்கமாக பொதி செய்யப்பட்ட நாணயங்களை வழங்க விரும்புகிறார்கள். இந்த பாரம்பரியம் பல தசாப்தங்களாக ஒன்றாக பின்பற்றப்படுகிறது. சென்னையில் இருந்து சுமார் 134 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் உள்ள கோயிலுக்கு ஆண்டுதோறும் 30 மில்லியன் முதல் 40 மில்லியன் மக்கள் வருகை தருகின்றனர்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் காணிக்கையின் அளவு

திருமலை மலைக்கோவிலுக்கு 50,000 ஆக இருந்த பக்தர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு ஒரு லட்சமாக அதிகரித்துள்ள நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வரும் வருமானமும் அதே விகிதத்தில் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், TTD நிர்வாக அதிகாரி (EO) AV தர்மா ரெட்டி, பாலாஜி பகவான் தொடர்பான பல்வேறு புள்ளிவிவரங்களை விளக்கினார். தரவுகளின்படி, திருமலை மலைக் கோயிலில் உள்ள மூலவருக்கு 1.2 டன் தங்க ஆபரணங்களும் 10 டன் வெள்ளியும் உள்ளன. மேலும், 11 டன் தங்கம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Do you know how much gold in Tirupati temple

2023 இல் மட்டும் 1,031 கிலோ தங்கம், ரூ.773 கோடி

உலகிலேயே மிகவும் பணக்கார இந்து கோவிலாக இருக்கும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலின் நிர்வாக அமைப்பான திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு (TTD) பக்தர்கள் வழங்கும் தங்க காணிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டு தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இருப்பினும், 1000 கிலோ தங்கம் காணிக்கையாக மக்கள் அளித்துள்ளனர். தங்கம் விலை தினமும் உச்சத்தை தொட்டு வரும் வேளையில், 2023 ஆம் ஆண்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை தெய்வமான ஸ்ரீ வெங்கடாஜலபதி சுவாமிக்கு 1,031 கிலோ கிராம் தங்கம் காணிக்கையாக வழங்கப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.773 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.

விலைமதிப்பற்ற ஏழுமலையானின் திருவாபரணங்கள்

அலங்கார பிரியரான ஏழுமலையானுக்கு சுமார் 11 டன் எடையுள்ள திருவாபரணங்கள் உள்ளன. ஏழுமலையானின் திருவாபரணங்களில் சந்தை மதிப்பு சுமார் 50,000 கோடி ரூபாய். விலை மதிக்க இயலாத மிகப் பழமையான திருவாபரணங்களும் ஏழுமலையானிடம் உள்ளன. அவை, வைரம், வைடூரியம், மரகதம், மாணிக்கம், கோமேதகம், புஷ்பராகம் உள்ளிட்ட நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட டன் கணக்கிலான எடையுள்ள திருவாபரணங்கள் ஏழுமலையானுக்கு தினமும் அணிவிக்கப்படுகின்றன.

irupatigold 11000kg

11 டன் தங்க மதிப்பு மட்டும் ரூ.8,496 கோடி

இந்தியாவின் பணக்காரக் கோயிலாகக் கருதப்படும் அதிகாரிகள் சமீபத்தில் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின்படி, திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை டெபாசிட் செய்த அனைத்து தங்கத்தின் மதிப்பு 11,329 கிலோவைத் தாண்டியுள்ளது, இந்த தங்கத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தங்கக் கடன் திட்டத்தின் கீழ் இந்த தங்கத்தை டெபாசிட் செய்து வைத்துள்ளது, இதன் நாணய மதிப்பு ரூ.8,496 கோடியாகும். தங்கம் விலை உயர உயர இதன் மதிப்பு உயரும்.

கடந்த நான்கு ஆண்டுகளில் 4 டன் தங்கம்

2020 ஆம் ஆண்டில் உலகளவில் பெருந்தொற்று, சர்வதேச பொருளாதார பிரச்சனைகள், பணிநீக்கம், பணவீக்கம் என அனைத்தையும் தாண்டி திருப்பதி வெங்கடாஜலபதி-க்கு மக்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் டிடிடிக்கு நான்கு கிட்டத்தட்ட டன் தங்கம் காணிக்கையாக அளித்துள்ளனர். வருடத்திற்கு சராசரியாக ஒரு டன் தங்கம் அதாவது 1000 கிலோ தங்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

More News

    Read more about: tirupati news
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+