Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் முதன்முதலாக கடலுக்கடியில் சுரங்கப்பாதைகள் – நவம்பர் 2023 இல் செயல்பாட்டுக்கு வருகிறது!

இந்தியாவில் முதன்முதலாக கடலுக்கடியில் சுரங்கப்பாதைகள் – நவம்பர் 2023 இல் செயல்பாட்டுக்கு வருகிறது!

உலகின் நீண்ட பாலம், உலகின் மிக உயரமான சிலை, உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் என உள்கட்டமைப்பு துறையில் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. இப்பொழுது அதில் ஒரு மைல் கல்லாக இந்தியாவின் முதன்முதல் கடலுக்கடியில் சுரங்கப்பாதைகள் வரவிருக்கின்றன. ரூ.12,721 கோடி மதிப்பிலான மும்பை கடற்கரை சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக கடலுக்கடியில் இரட்டை சுரங்கப்பாதைகள் விரைவில் திறக்கப்பட உள்ளன. மரைன் டிரைவ் முதல் பாந்த்ரா வொர்லி கடல் இணைப்பு கட்டத்தில் கிட்டத்தட்ட 3 கிமீ நீளமுள்ள நீருக்கடியில் சுரங்கப்பாதை நவம்பர் 2023இல் திறக்கப்படவிருக்கிறது! இது இந்தியாவே பெருமைப்படும் தருணம் தானே!

twintunnelcover

பொருளாதாரத் தலைநகரில் பிரமாண்டம்

இந்தியாவின் பொருளாரத் தலைநகரான மும்பை சில முக்கிய மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. அதில் ஒன்றுதான் மும்பை கடற்கரை சாலை திட்டம் (MCRP)! இது ஒரு தரம் பிரிக்கப்பட்ட நெடுஞ்சாலை ஆகும், இது தெற்கில் உள்ள மரைன் லைன்களை மும்பையின் மேற்கு கடற்கரையில் வடக்கே கண்டிவாலிக்கு இணைக்கிறது. சமீபத்தில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இந்த கடற்கரை சாலையை ஆய்வு செய்தார். அறிக்கைகளின்படி, திட்டத்தின் முதல் கட்டம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது மற்றும் இந்தியாவின் முதல் கடலுக்கடியில் சுரங்கப்பாதை நவம்பர் மாதம் திறக்கப்படும்!

2 கிமீ தூரத்திற்கு கடலுக்கடியில் பயணம்

10.58 கிலோமீட்டர் தூரம் கொண்ட மும்பை கடற்கரை சாலை திட்டம் மரைன் டிரைவை பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்புடன் இணைக்கிறது. 2.07 கிலோமீட்டர் நீளமுள்ள ஒவ்வொரு சுரங்கப்பாதையிலும் 3.2 மீட்டர் அகலமுள்ள மூன்று சேனல்கள் ஆறு குறுக்குவழிகள், நான்கு பாதசாரி வழிகள், இரண்டு வாகன ஓட்டிகளுக்கான வழிகள் இருக்கின்றன. சுரங்கப்பாதையின் ஆழமான புள்ளி மலபார் மலைக்கு அருகில் 72 மீட்டர் ஆகும்.

undertunnel

பயன்படுத்தப்பட்ட பல நவீன தொழில்நுட்பங்கள்

மும்பை கடற்கரை சாலை திட்டத்தில் மிகப்பெரிய டன்னல் போரிங் மெஷின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சீனா ரயில்வே கட்டுமான கனரக தொழில் நிறுவனம் லிமிடெட் (CRCHI) ஆல் தயாரிக்கப்பட்டது மற்றும் 1,700 டன்களுக்கு மேல் எடை கொண்டது. போரிங் வேலை ஜனவரி 2021 இல் தொடங்கியது. கடந்த இரண்டு வருடங்களாக இந்த சுரங்கப்பாதையின் பணிகள் கடுமையாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த சுரங்கப்பாதை கிர்கானுக்கு அருகில் இருந்து, அரேபிய கடல், கிர்கான் சௌபட்டி மற்றும் மலபார் மலையை கடந்து, பிரிட்ஜ் கேண்டி மருத்துவமனைக்கு அருகில் முடிவடையும் முன் செல்கிறது.

பல சவால்களை கடந்து வெற்றி

சீனாவில் நடைபெற்ற லாக்டவுன், புவிசார் அரசியல் கவலைகள் உள்ளிட்ட சவால்களை இந்தத் திட்டம் எதிர்கொண்டது. சுரங்கப்பாதைக்கும் கடற்பரப்பிற்கும் இடையிலான இடைவெளிகள் வழியாக கடல் நீர் கசிவதைத் தடுக்க குழு தொடர்ந்து குழம்பி தவித்தது. சரிவின் விளிம்பில் தங்களுக்கு மேலே உள்ள கடற்பரப்பின் சவாலையும் அவர்கள் எதிர்கொண்டனர். இருப்பினும் அத்தனை சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு இந்த இரட்டை சுரங்கப்பாதைகளை நிறுவியுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.

undertunnel

வெறும் 10 நிமிடங்களாக குறையும் பயணம்

இத்திட்டம் முடிவடைந்த பின், நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும். கடற்கரை சாலை திட்டத்தின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் தெற்கு பகுதியில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்டன. விரைவில் திறக்கப்படவுள்ள இந்த அதிவேக கடற்கரை சாலை பீக் ஹவர்ஸில், கிர்கானுக்கும் வொர்லிக்கும் இடையிலான பயண நேரத்தை 45 நிமிடங்களில் இருந்து வெறும் 10 நிமிடங்களாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

undertunnel

விரைவில் நீருக்கடியில் புல்லட்

நவம்பர் 2023இல் திறக்கப்படும் இரட்டை சுரங்கப்பாதைகள் மட்டுமின்றி மும்பையில் விரைவில் நீருக்கடியில் புல்லட் ரயில் செல்லவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மும்பை-அகமதாபாத் இடையே புல்லட் ரயிலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் அதுவும் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது. மும்பை மற்றும் தானே இடையே புல்லட் ரயிலில் நீருக்கடியில் பயணம் செய்ய முடியும். தானே விரிகுடாவில் ஷில்பாடா மற்றும் பாந்த்ரா-குர்லா நிலையங்களை இணைக்கும் வகையில் ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்படும்.விரைவில் கடலுக்கடியில் புல்லட் செல்லுவதையும் நீங்கள் காணப் போகிறீர்கள்.

இந்தியாவின் முதல் கடலுக்கடியில் இரட்டை சுரங்கப்பாதை திறக்கப்படுவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

More News

    Read more about: travel news mumbai maharashtra
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+