Search
  • Follow NativePlanet
Share
» »வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை – சாமானிய மக்கள் கனவு தான் காண வேண்டுமா?

வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை – சாமானிய மக்கள் கனவு தான் காண வேண்டுமா?

மன்னராட்சி தொடங்கி மக்களாட்சி வரை, அதாவது ராஜா காலம் தொடங்கி இன்று வரை தங்கம் என்கிற ஒரு பொருளின் விலையும் மதிப்பும் கூடிக் கொண்டே தான் வருகிறதே தவிர குறையவில்லை! இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6750 க்கு விற்பனை செய்யப்படுகிறது. செய்கூலி, சேதாரம் எல்லாம் சேர்த்து ஒரு பவுனுக்கு ரூ.60,000 கொடுத்து நாம் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சாமானிய மக்கள் என்ன செய்வது? கற்பனை மட்டும் தானா? இதற்கு என்ன தான் தீர்வு? தங்கம் விலை குறையுமா?

தங்கத்தின் மீது அதிக மோகம் கொண்ட பட்டியலில் இந்தியர்கள் முதலிடம்

உலகிலேயே தங்கம் அதிகம் வாங்கும் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் சீனா முதல் இடத்தில் இருந்தாலும், இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரையில் தங்கம் மீது முதலீடு செய்வது அதிகம். வெளிநாட்டினர் தங்கத்தை ஒரு சேமிப்பாக பார்க்கின்றனர். ஆனால், நாம் அப்படி இல்லை. இந்தியர்கள் தங்கத்தை பெருமை மிக்க ஒரு பொருளாகவும், ஆடம்பரமாகவும், அத்தியாவசியமாகவும் பார்க்கின்றனர். அதனால் தான் உலகிலேயே தங்கத்தின் மீது அதிக மோகம் கொண்ட ஆட்களின் பட்டியலில் இந்தியர்கள் முதலிடம் வகிக்கின்றனர்.

goldpricesatrecordhighs1

இறக்குமதி செய்யப்படுவதால் தான் இவ்வளவு விலையா?

இந்தியாவில் சுரங்கங்கள் இருந்தாலும் தங்கம் இந்தியாவில் இருந்து உற்பத்தி செய்யப்படுவது இல்லை. தங்கம் வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. கிட்டதட்ட கச்சா எண்ணெய் போல, கச்சா எண்ணெய் பெட்ரோல், டீசலாக மாற்றி நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பலன் அளிக்கிறது. ஆனால் தங்கம் வெறும் சேமிப்பாக மட்டுமே முடங்கி கிடக்கிறது. பல உலக அரசாங்கங்கள் தங்கத்தினை சேமிப்பாக சேர்த்து வைக்கும் ஒரு காரணத்தினாலும் தங்கள் விலை உச்சம் தொட்டுள்ளது எனலாம்.

உலகில் பிரச்சினை வரும் போதெல்லாம் தங்கம் விலை உயரும்

முந்தைய காலத்தில் தங்கத்தை அதிகமாக வைத்திருந்த பல நாடுகள் தங்கம் விலையில் ஏற்பட்ட அப்போதைய உயர்வை பணமாக்கிக்கொள்ள அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் முதலீட்டுச் சந்தையில் எப்போதெல்லாம் நிலையற்ற தன்மை வருகிறதோ அப்போதெல்லாம் தங்கம் மீதான முதலீடுகள் அதிகரிக்கும். அதன்படி எப்போதெல்லாம் உலக அரசியலில் நிலையற்ற தன்மை வருகிறதோ அப்போதெல்லாம் தங்கம் விலை உயரும். அதே தான் இப்பொழுதும் நடந்து வருகிறது.

goldpricesatrecordhighs

விண்ணைத் தொட்ட தங்கத்தின் விலை

அதன்படி அமெரிக்க - உக்ரைன் போர், சீனா- தைவான் பிரச்சனை, சீனாவின் நீண்ட லாக்டவுன், தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீன போர், அனைத்தையும் தாண்டி 2024 ஆம் ஆண்டு இந்தியா, உட்பட 50 சதவீத மக்கள் தொகை கொண்ட நாடுகளில் பொது தேர்தல் நடைபெறுகிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலை விண்ணைத் தொட்டுள்ளது. அதுவும் குறிப்பாக உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் (காசா) அதிகரித்து வரும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை, பணவீக்கத்திற்கு எதிராக தங்கத்தை ஒரு ஹெட்ஜ் என முதலீட்டாளர்கள் பார்ப்பதன் காரணமாக சமீபத்திய உயர்வு முதன்மையாக உள்ளது.

எப்பொழுதும் ஏறு முகத்தில் தான் இருக்கும் - தங்கம் விலை

2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தங்கத்தின் விலை ரூபாய் மதிப்பில் 9 சதவீதம் உயர்ந்துள்ளது. மஞ்சள் உலோகத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 71,000 ஆகவும், மார்ச் 2020 இல் கோவிட்-19 தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து ரூபாய் மதிப்பில் 69 சதவீதம் உயர்ந்துள்ளது. இதை சென்செக்ஸில் 43 சதவீத உயர்வுடன் ஒப்பிடவும் (ஒரு மாத காலச் சரிவைத் தவிர்த்துவிட்டால். மார்ச் 2020 இல்) மற்றும் இந்திய குடும்பங்களால் ஏன் இந்த உலோகத்தை நாணயம் மற்றும் பணவீக்க ஹெட்ஜ் என்று பார்க்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

தங்கத்திற்கான விலையும் மதிப்பும் ஒரு நாளும் குறைந்தது இல்லை. இனியும் குறையாது. பணம் இருப்பவர்கள் கட்டாயம் வாங்கிக் கொண்டே தான் இருப்பார்கள்!

More News

    Read more about: interesting facts gold prices
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+