Search
  • Follow NativePlanet
Share
» »மக்களே உஷார்...தமிழ்நாடு, கர்நாடகாவில் வெயில் இன்னும் அதிகரிக்குமாம்

மக்களே உஷார்...தமிழ்நாடு, கர்நாடகாவில் வெயில் இன்னும் அதிகரிக்குமாம்

வழக்கமாக, இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூன் வரை வெப்ப அலை வீசும். ஆனால் இந்த ஆண்டு, தமிழ்நாடு உட்பட 16 மாநிலங்களில் வழக்கத்தை விட அதிக வெப்ப அலை அலை வீச வாய்ப்பு உள்ளது. அடுத்த 6 நாட்களில் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Heatwave Update

தென் இந்திய வெப்பநிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, கர்நாடகாவின் வட பகுதி, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வழக்கத்தை விட அதிக வெப்ப அலை இனி வரும் நாட்களில் இருக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் கேரளா இல்லை. அதே போல் இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள மாநிலங்களான ராஜஸ்தான், குஜராத், அரியானா, பஞ்சாப், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், பீஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிஷா மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை IMD பட்டியலில் உள்ளன.

மத்திய மற்றும் வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. இந்த வாரத்தின் ஆரம்பத்தில், மத்திய மற்றும் கிழக்கு இந்தியா மற்றும் வடமேற்கு சமவெளிகள் அதிக வெப்ப அலை நாட்களைக் காணும் என்றும் தெரிவித்துள்ளது.

Heatwave Update

மாநில வாரியாக கணிப்பு:

தமிழ்நாடு:

சென்னை, மதுரை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற நகரங்களில் கடும் வெப்பம் காணப்படும்.
மழை வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தேனி, தின்டுக்கல், மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி.

டெல்லி மற்றும் பிற மாநிலங்கள்:

டெல்லியில் பகல் வெப்பநிலை சுமார் 42 டிகிரி செல்சியஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு பகுதி, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் ஒடிஷா ஆகிய மாநிலங்களில் 10 முதல் 11 வெப்ப அலை நாட்கள் இருக்க வாய்ப்பு உள்ளது.

2024 எப்படி இருந்தது?

முந்தைய ஆண்டு இந்தியா கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான கோடையை சந்தித்தது - மொத்தம் 536 வெப்ப அலை நாட்கள் பதிவு செய்யப்பட்டது. 2024 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் உலகளவில் பதிவான மிகக் கடும் வெப்ப ஆண்டாக இருந்தது. இந்த ஆண்டு, வெப்ப அலைகள் இந்தியாவில் பிப்ரவரி 27-28 ஆகிய தேதிகளில் தான் ஆரம்பமாகிவிட்டது. 2024 இல் முதன்முறையாக வெப்ப அலை ஏப்ரல் 5 அன்று பதிவாகியுள்ளது.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியாவில் வெப்ப அலைகள் வழக்கமானவைதான். ஆனால் காலநிலை மாற்றம் காரணமாக இவை அதிகமாகவும் கடுமையாகவும் காணப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

2022 ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வு, 21ஆம் நூற்றாண்டில் வெப்ப அலை அபாயம் 10 மடங்கு அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கிறது. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 70% க்கும் மேற்பட்ட பகுதிகள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படலாம். 2006 இல் இருந்து இதுவரை இந்தியாவின் 12 மிகவும் வெப்பமான ஆண்டுகள் பதிவாகியுள்ளன. அதில் 2016 மிகவும் வெப்பமான ஆண்டாக இருந்தது.

More News

    Read more about: heatwave summer tamil nadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+