Search
  • Follow NativePlanet
Share
» »இந்திய இராணுவமே பிரச்சாரம் செய்து சுற்றுலா ஸ்தலங்களை மேம்படுத்துகிறது என்றால் நம்ப முடிகிறதா?

இந்திய இராணுவமே பிரச்சாரம் செய்து சுற்றுலா ஸ்தலங்களை மேம்படுத்துகிறது என்றால் நம்ப முடிகிறதா?

இந்திய ராணுவமே சுற்றுலா ஸ்தலங்களை ஊக்குவிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது! ஆம், ஆச்சர்யமாக இருந்தாலும் உண்மை தான்! வடகிழக்கில் சாகச சுற்றுலாவை மேம்படுத்த இந்திய ராணுவம் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. வடகிழக்கில் கடந்த மூன்று மாத காலமாக தொடர்ச்சியான சாகச நடவடிக்கைகளை மேற்கொண்டு வடகிழக்கின் அழகை ஒட்டு மொத்த தேசத்திற்கும் காண்பித்துள்ளது! எதனால் இது நடந்தது? வடகிழக்கில் அப்படி என்ன இருக்கிறது? அங்கே என்ன நாம் சுற்றி பார்க்கலாம் என்பது குறித்து இங்கே பார்ப்போம்!

அண்டை நாடுகளுடன் எல்லையை பகிரும் வடகிழக்கு மாநிலங்கள்

அண்டை நாடுகளுடன் எல்லையை பகிரும் வடகிழக்கு மாநிலங்கள்

அண்டைய நாடுகளுடன் வடகிழக்கு மாநிலங்கள் எல்லைகளை பகிர்ந்து கொள்வதால் ,லைன் ஆஃப் ஆக்ச்சுவல் கன்ட்ரோல் (LAC) என்ற கட்டுப்பாட்டின் கீழ் ராணுவ கண்காணிப்பில் இருக்கின்றன. LAC வழியாக உள்ள பெரும்பாலான பாதைகள் பொதுமக்களால் ஒருபோதும் ஆராயப்படவில்லை. சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் முழுவதும் சாகச சுற்றுலாவை தீவிரமாக ஊக்குவிப்பதில் சிவில்-இராணுவ ஒத்துழைப்பு அளித்து இந்த முயற்சியில் இறங்கியது.

பொருளாதரத்தில் முன்னேற்றம் காண முயற்சி

பொருளாதரத்தில் முன்னேற்றம் காண முயற்சி

வடகிழக்கு பிராந்தியமானது சாகச சுற்றுலாவிற்கு பயன்படுத்தப்படாத பரந்த திறனைக் கொண்டுள்ளது. சுற்றுலா தொடர்பான பொருளாதார நடவடிக்கைகளின் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதன் மூலம் உள்ளூர் வேலைவாய்ப்பை அதிகரிக்கும். இது உள்ளூர் பொருளாதாரத்தை நிலைநிறுத்த உதவுகிறது என்று ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தின் பங்களிப்பு

இந்திய ராணுவத்தின் பங்களிப்பு

இது தொடர்பாக ஒவ்வொரு மாநிலத்தின் தனி மாநில அரசுகளால் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்திய ராணுவம் ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சியை தொடர்ச்சியாக சாகச நடவடிக்கைகள் மூலம் மேற்கொண்டுள்ளது. சிக்கிம் முதல் அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்கு முனை வரையிலான பெரும்பாலான எல்லைப் பகுதிகளின் கீழ் பிரமாதமான சுற்றுலாத் தலங்கள் வருகின்றன. அவற்றை எல்லாம் மேம்படுத்துவது சுற்றுலா வருவாயை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

பல்வேறு சாகச நடவடிக்கைள்

பல்வேறு சாகச நடவடிக்கைள்

சமீபத்திய அறிக்கைகளின்படி, இந்த ஆண்டு, ஒரு டிரான்ஸ்-தியேட்டர் சாகச நடவடிக்கை, லைன் ஆஃப் ஆக்ச்சுவல் கன்ட்ரோலில் (LAC) ஏற்பாடு செய்யப்பட்டது, இதில் ஒயிட் வாட்டர் ராஃப்டிங், மவுண்டன் பைக்கிங் மற்றும் ட்ரெக்கிங் போன்ற பல்வேறு சாகச நடவடிக்கைகள் இடம் பெற்றன. இதில் பிராந்தியத்தைச் சேர்ந்த பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் மிகவும் ஆர்வமாக சுறுசுறுப்பாக பங்கேற்றனர்.

மூன்று மாதங்கள் அரங்கேறிய பிரச்சாரம்

மூன்று மாதங்கள் அரங்கேறிய பிரச்சாரம்

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக இராணுவம் மூன்று மாத நீண்ட தொடர் பயணங்களைத் தொடங்கியது. சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் முழுவதும் மதிப்பிடப்படாத சாகச சுற்றுலாவை ஊக்குவிப்பதோடு, மூன்று மாத கால பிரச்சாரம் செய்தது. இதில் மனதைக் கவரும் வகையில் இராணுவ சிவிலியன் உறவுகளும் மேம்பட்டது என்று தான் கூற வேண்டும்.

உற்சாகமாக கண்டு களித்த பொது மக்கள்

உற்சாகமாக கண்டு களித்த பொது மக்கள்

சாகச விளையாட்டு பிரச்சாரத்தில், ஆறு மலையேறும் பயணங்கள், 700 கிலோமீட்டர்களுக்கு மேல் (16,500 அடி உயரம் வரை) ஏழு மலையேற்றங்கள், ஆறு பள்ளத்தாக்குகளில் செப்பனிடப்படாத சாலைகளில் 1,000 கிலோமீட்டருக்கும் அதிகமான சைக்கிள் பயணங்கள் மற்றும் மூன்று வெள்ளை நீர் ராஃப்டிங் பயணங்கள் இருந்தன. இதனை பெரும் திரளான பொது மக்கள் கண்டு களித்தனர்.

அழகான வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுலா

அழகான வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுலா

இந்தியாவின் உண்மையான இயற்கை அழகை காண இந்தியாவின் வட கிழக்கு பகுதிகளுக்கு தான் செல்ல வேண்டும் என்று கூறுவார்கள். இந்த தொலைதூர, வளர்ச்சியடையாத எல்லைப் பகுதிகளின் அதிர்ச்சியூட்டும், தீண்டப்படாத அழகிய நிலப்பரப்புகள், பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள், பனி மூடிய சிகரங்கள், தாவரங்கள், விலங்கினங்கள், கலாச்சாரம் மற்றும் மரபுகள் ஆகியவற்றின் பெருமையை வெளி உலகிற்கு காட்டும் விதமாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் மக்களின் பங்களிப்பு

உள்ளூர் மக்களின் பங்களிப்பு

இந்த மலைப்பாங்கான பகுதிகளில் சுற்றுலா சுற்றுலாவை ஊக்குவிப்பதன் மூலம் இந்த பகுதி மேலும் மேம்படும். சுற்றுலா நடவடிக்கைகளில் பெண்களின் பங்கேற்பு இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு இடங்களைச் சேர்ந்த ஆர்வலர்கள் ஒரு பயனுள்ள நோக்கத்தில் இந்த இடங்களுக்கு வருகை தருவார்கள். இதுவே மாறிவரும் காலத்தின் அடையாளம் மற்றும் வடகிழக்குக்கான பிரகாசமான எதிர்காலத்திற்கான அறிகுறியாகும்.

More News

    Read more about: sikkim arunachal pradesh
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+