Search
  • Follow NativePlanet
Share
» »அனுமன் பிறந்த இடமான அஞ்சநேரி மலைகளில் ரூ.380 கோடில் செலவில் ரோப் கார்கள்!

அனுமன் பிறந்த இடமான அஞ்சநேரி மலைகளில் ரூ.380 கோடில் செலவில் ரோப் கார்கள்!

மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள அஞ்சநேரி மலைகள் ராமபக்தரான அனுமன் பிரான் பிறந்த இடம் என்று இந்து புராணங்கள் கூறுகின்றன. ராமர் வனவாசத்தின் போது நீண்ட காலம் இங்கு தங்கி இருந்ததாக நம்பப்படுகிறது. இந்த புனிதமான மலையில் ஒரு குகை மற்றும் அஞ்சனி மாதா கோவில் உள்ளது. ஆனால் இந்த தலத்தை தரிசிக்க பக்தர்கள் 4200 அடிக்கு மேல் உயரத்தில் உள்ள மூன்று மலைகள் மீது மலையேற வேண்டும், இதற்கு கட்டாயம் இரண்டிலிருந்து மூன்று மணி நேரத்திற்கு நடக்க வேண்டும். விரைவில், மலையேற்றம் செய்பவர்களுக்கும், யாத்ரீகர்களுக்கும் ஓய்வு கிடைக்கப் போகிறது. அனுமன் பிறந்த இடமான அஞ்சனேரி மலையில் ரோப்வே விரைவில் ரூ. 377 கோடி மதிப்பில் அமையவிருக்கிறது. இந்த செய்தியை பக்தர்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர்!

1

அனுமன் பிறந்த அஞ்சநேரி மலைகள்

4,200 அடி உயரத்தில் அமைந்துள்ள அஞ்சனி மாதா கோயிலை அடைய மூன்று மலைகளில் ஏறிச் செல்ல வேண்டும். செங்குத்தான சாலையையும், மலை முகடுகளையும் கடந்து சென்று கோயிலை அடைய சுமார் இரண்டு முதல் மூன்று மணிநேரம் ஆகிறது. இதனால் பக்தர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். இருந்தாலும் கோயிலுக்கு செல்ல விரும்பும் பக்தர்கள் பல சிரமங்களையும் கடந்து கோயிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்து வருகின்றனர். ஆனால் பக்தர்களின் வசதிக்காக விரைவில் ரோப்வே அமையவுள்ளது.

6 கி.மீ தூரத்தை சில நிமிடங்களில் கடக்க வசதி

சமீபத்திய அறிக்கைகளின் படி அஞ்சனேரி மலைகள் விரைவில் ஒரு ரோப்வேயைக் காணப் போகிறது, இது யாத்ரீக தளத்திற்கான இணைப்பை அதிகரிக்கும். 5.7 அடி நீளம் கொண்ட கயிறுப்பாதையானது மூன்று மலைகளில் ஏறும் கடினமான பயணத்தை சில நிமிடங்களாக குறைக்கப் போகிறது. இந்த கனவு திட்டம் ₹377 கோடி மதிப்புடையது. 6 கி.மீ நீளம் கொண்ட இந்த ரோப்வே திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அடுத்த இரண்டே ஆண்டுகளில் ட்ரெக்கிங் பாயின்ட்டான பிரம்மகிரியில் இருந்து அஞ்சநேரி மலைகளுக்கு நீங்கள் ரோப் காரில் பயணிக்கலாம்.

2

இந்தியா முழுவதும் 90 கி.மீ ரோப்வேகள்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அரசாங்கத்தின் 'பர்வரத்மாலா' திட்டத்தின் கீழ் இந்த திட்டத்தை ஏலம் எடுத்துள்ளது. அஞ்சநேரி மலைகள் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் 18 ரோப்வே திட்டங்களைக் கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் மொத்தம் 90 கி.மீ ரோப்வேகள் 2024க்குள் தயாராகிவிடும். ஒரு ரோப்வேயில் இருந்து ஸ்ரீநகரின் சங்கராச்சாரியார் கோவில் வரை, ஒன்று லே அரண்மனை வரை, மற்றொன்று ஸ்ரீசைலம் ஜோதிர்லிங்கஸ் கோவிலில் இருந்து குவாலியர் கோட்டையை இணைக்கிறது. யாத்ரீகர்கள் மற்றும் பிரபலமான சுற்றுலாத் தலங்களுக்கு இணைப்பை அதிகரிப்பதை இந்த மையம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

கொடைக்கானலிலும் கூடிய சீக்கிரத்தில் ரோப்வே

பழனிக்கு இடையே தமிழகத்தின் தனித்துவமான கொடைக்கானல் மலைப்பகுதிக்கு மக்கள் விரைவில் கேபிள் கார் பயணத்தை மேற்கொள்ளலாம். கர்நாடகாவின் கடற்கரை நகரமான உடுப்பியில் இருந்து குளிர்ச்சியான கொடசாத்ரி மலைகளுக்கு 7 கிமீ ரோப்வே அமைக்கப்படும். மலையேறுபவர்கள் இந்த ரோப்வேகள் மலைகள் மற்றும் இந்த பார்வை பார்க்கும் இடங்களுக்கு நடந்து செல்வதில் சிலிர்ப்பை ஏற்படுத்தும் என்று உங்களுக்கு தோணலாம், ஆனால் உண்மையில், இந்த இடங்களை தங்கள் சொந்த வசதியிலும் ஓய்வு நேரத்திலும் பார்க்க விரும்புவோருக்கு இது இணைப்பை மேம்படுத்துகிறது.

இந்த ரோப்வேகள் இணைப்பை எளிதாக்கும், அனைத்து வயதினரும் வரலாற்று, கலாச்சார மற்றும் புராண முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடங்களை அணுக அனுமதிக்கிறது. இதைப்பற்றிய உங்களுடைய கருத்து என்ன?

More News

    Read more about: travel news pilgrimage
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+