Search
  • Follow NativePlanet
Share
» »ராமர் கோவிலில் திறக்கப்பட்டுள்ள தங்க கதவு – இன்னும் 12 தங்க கதவுகள் திறக்கப்படுமாம்!

ராமர் கோவிலில் திறக்கப்பட்டுள்ள தங்க கதவு – இன்னும் 12 தங்க கதவுகள் திறக்கப்படுமாம்!

ஒவ்வொரு நாளும், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கான பொது மக்களின் உற்சாகம் புதிய உச்சத்தை அடைகிறது. ஒவ்வொரு நாளும் ராமர் கோவில் பற்றிய புதிய தகவல்களை நாம் அறிந்து வருகிறோம். இப்போது ராமர் கோவிலில் 12 அடி உயரமும் 8 அடி அகலமும் கொண்ட தங்கக் கதவு கோயிலின் கருவறையில் நிறுவப்பட்டுள்ளது. அறிக்கைகளின்படி, கோயில் வளாகத்தில் மொத்தம் 13 தங்கக் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளதாம். மீதமுள்ள 12 அடுத்த மூன்று நாட்களில் நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

ராமர் கோவிலில் தங்கக் கதவுகள்

அயோத்தியில் ராமர் கோயிலின் திறப்பு விழாவிற்காக ராமர் பக்தர்களிடையே உற்சாகம் அதிகரித்துள்ள நிலையில், 12 அடி உயரமும் 8 அடி அகலமும் கொண்ட முதல் கம்பீரமான தங்க கதவு மேல் தளத்தில் அதாவது கருவறையில் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களில் மேலும் 13 தங்கக் கதவுகள் கோயிலில் நிறுவப்பட உள்ளன. ஜனவரி 22 கும்பாபிஷேகத்திற்குப் பிறகு பக்த கோடிகள் ராமர் கோவிலுக்கு வருகை தரலாம்.

majesticgoldendoorinstalledinayodhyarammandir

நேர்த்தியான மற்றும் கண்கவர் வடிவமைப்பு

அழகாக வடிவமைக்கப்பட்ட மணற்கல் சுவர்களுக்கு மத்தியில் தங்கக் கதவு பிரகாசமாக ஜொலிக்கிறது. கூர்ந்து கவனித்தால், வரவேற்கும் யானைகளுடன் வடிவமைக்கப்பட்ட ஸ்வர்ன் துவாரையும், ஒவ்வொரு பக்கமும் வாயில் காவலர்களுடன் மேல் பகுதியில் அரண்மனை போன்ற வடிவமைப்புகளையும் காணலாம். கதவின் கீழ் பகுதி நான்கு சதுரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொன்றும் சிக்கலான கலைப்படைப்புகளை பெருமைப்படுத்துகின்றன. மொத்தத்தில், இந்த கதவுகள் கலைப்படைப்புகளின் துண்டுகளாகும், அவை அவற்றின் விவரங்களுடன் உங்களை மயக்கும்.

கலைநயத்தின் பிரமாண்ட படைப்பு

மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்தக் கோயில் பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்டு வருகிறது. கோயிலின் நுழைவாயிலில் அனுமன், கருடன், யானைகள் மற்றும் சிங்கங்களின் சிற்பங்களைக் காணலாம். உள்ளே, நீங்கள் நேர்த்தியான தெய்வங்களின் சிலைகள் மற்றும் அழகாக செதுக்கப்பட்ட தூண்கள் மற்றும் கூரைகளை நம்மை மயக்கும் என்று கூறப்படுகிறது.

ayodhyarammandir

42 தங்க முலாம் பூசப்பட்ட கதவுகள்

பிரமாண்டமாக எழுப்பட்டுள்ள இந்த கோவிலில் கோவிலில் மொத்தம் 46 கதவுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் 42 தங்க முலாம் பூசப்பட்டதாக உத்தரப்பிரதேச முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று நாட்களில் மேலும் 13 தங்கக் கதவுகள் கோயிலில் சேர்க்கப்பட உள்ளன. அயோத்தியில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் பங்கேற்க ஆயிரக்கணக்கான மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பல பிரபலங்கள் மற்றும் பக்த கோடிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம்

திட்டமிட்டபடி, ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி "பிரான் பிரதிஷ்டா" அல்லது ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு தயாராகி வருகிறது, இதில் பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் இதர சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோயில் அறக்கட்டளை, ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா, 7,000 நபர்களுக்கு அழைப்புகளை அனுப்பியுள்ளது. இதில் அரசியல்வாதிகள், பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளனர், இது உண்மையிலேயே முக்கியமான சந்தர்ப்பமாக அமைகிறது.

உத்தரப்பிரதேசத்தில் பூரண மதுவிலக்கு

அயோத்தியில் ஏற்பாடுகளை நேரில் கவனித்து வரும் முதல்வர் ஆதித்யநாத், ஜனவரி 14-ஆம் தேதி தொடங்கவுள்ள நகரில் மிகப்பெரிய தூய்மை இயக்கத்தை செயல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், அன்றைய தினம் மாநிலம் முழுவதும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோயில் திறப்பு விழா நாளான ஜனவரி 22ஆம் தேதி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளார்.

More News

    Read more about: ram mandir ayodhya
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+