Search
  • Follow NativePlanet
Share
» »தமிழக பயணிகளுக்கு குட்நியூஸ் - 16 பெட்டிகளாக மாற்றப்படும் திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத்!

தமிழக பயணிகளுக்கு குட்நியூஸ் - 16 பெட்டிகளாக மாற்றப்படும் திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத்!

எத்தனை ரயில்கள் இயக்கினாலும், எத்தனை பேருந்துகள் இயக்கினாலும் முழு கொள்ளளவில் பயணிக்கக்கூடிய தமிழகத்தின் முக்கிய பாதைகளில் திருநெல்வேலி-சென்னை வழித்தடமும் அடங்கும். வந்தே பாரத் அறிமுகப்படுத்தியதில் இருந்து பலத்த வரவேற்பை பெற்று முழு கொள்ளளவில் இயங்கி வரும் இந்த சேவையில் இப்போது கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 8 பெட்டிகளாக இயங்கி வந்தே நெல்லை-சென்னை வந்தே பாரத் கூடிய விரைவில் 16 பெட்டிகளாக மாற்றப்படும்! இந்த செய்தியை தமிழக மக்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர்!

பயணிகளிடம் கிடைத்த அமோக வரவேற்பு

தென் மாவட்டங்களில் இருந்து சென்னையை அடையும் விதமாக, வந்தே பாரத் ரயில் சேவை 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ரயிலில் 7 ஏசி சேர் கார் பெட்டிகளும், ஒரு எக்ஸிகியூட்டிவ் சேர்கார் பெட்டியும் என மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப் பட்டுள்ளன. வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து, 6 நாட்கள் இயங்கப்படும் இந்த ரயில் மொத்தமுள்ள 650 கி.மீ. தூரத்தை 7 மணி நேரம் மற்றும் 50 நிமிடங்களில் சென்றடைகிறது. இந்த ரயில் சேவை தொடங்கியது முதல் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 8 பெட்டிகள் கொண்ட இந்த ரெயிலில் ஒரே நேரத்தில் 530 பேர் பயணிக்க முடியும்.

Vande Bharat

பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க முடிவு

இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு அதே நாள் மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது. மறு மார்க்கமாக, எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு அதே நாள் இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலியை அடைகிறது. பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளதால் இந்த வந்தே பாரத் ரெயிலில் டிக்கெட்டுகள் மிக விரைவாக விற்றுத் தீர்ந்துவிடுகிறது. காத்திருப்போர் எண்ணிக்கை 100-ஐ தாண்டி பதிவாகி வருகிறது. எனவே, எழும்பூர் - நெல்லை இடையிலான வந்தே பாரத் ரெயிலின் பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என தெற்கு ரெயில்வேக்கு பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

500 க்கும் மேற்பட்ட பயணிகள் கூடுதலாக பயணம்

இந்த நிலையில், எழும்பூர் - நெல்லை இடையிலான வந்தே பாரத் ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கையை 8 இல் இருந்து 16 ஆக உயர்த்த மத்திய ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியுள்ளது. ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும். இதன் மூலம் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் கூடுதாக பயணம் செய்ய முடியும் என தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Vande Bharat

வந்தே பாரத் ரயில் டிக்கெட் புக் செய்வது எப்படி?

IRCTC இணையதளம் மூலம் ஆன்லைன் முன்பதிவு

· IRCTC இணையதளத்தைப் பார்வையிடவும்.

· உங்கள் கணக்கு மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்

· புறப்படும் மற்றும் சேருமிட நிலையங்களை உள்ளிட்டு பயணத் தேதியைத் தேர்வு செய்யவும்.

· கிடைக்கக்கூடிய ரயில்களின் பட்டியலிலிருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸைத் தேர்ந்தெடுக்கவும்.

· உங்களுக்கு விருப்பமான வகுப்பைத் தேர்ந்தெடுக்கவும் (எக்ஸிகியூட்டிவ் நாற்காலி கார் அல்லது நாற்காலி கார்).

· பயணிகளின் விவரங்களைப் பூர்த்தி செய்து, கட்டணத்தைத் தொடரவும்.

· பணம் செலுத்தியதும், மின் டிக்கெட்டைப் பெறுவீர்கள்.

IRCTC மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்தல்

· உங்கள் ஸ்மார்ட்போனில் IRCTC Rail Connect பயன்பாட்டைப் பதிவிறக்கவும்.

· டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இணையதளத்தில் உள்ள அதே படிகளைப் பின்பற்றவும்.

More News

Read more about: vande bharat chennai tirunelveli
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+