Search
  • Follow NativePlanet
Share
» »இ.சி.ஆர் சாலையில் புதுவைக்கு இனி ரயிலில் செல்லலாம் – விரைவில் புதிய ரயில் பாதை!

இ.சி.ஆர் சாலையில் புதுவைக்கு இனி ரயிலில் செல்லலாம் – விரைவில் புதிய ரயில் பாதை!

வேலை நிமித்தமாகவும், சொந்த காரணங்களுக்காகவும் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் சென்னையிலிருந்து புதுவைக்கும், புதுவையிலிருந்து சென்னைக்கும் சென்று வருகின்றனர். ஆனால் விடுமுறை நாட்களிலும், வார இறுதிகளிலும் சென்னையிலிருந்து புதுவைக்கு படையெடுக்கும் இளசுகளின் எண்ணிக்கை அதை விட அதிகம். குறிப்பாக சென்னையிலிருந்து புதுவைக்கு செல்லும் நபர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பேர் கிழக்கு கடற்கரைச் சாலையையே அதிகம் உபயோகிக்கின்றனர். இனி நீங்கள் இதே இ.சி.ஆர் சாலையில் புதுவைக்கு ரயிலில் செல்லலாம்!

சென்னை-புதுவை இரண்டு வழிகள்

சென்னையிலிருந்து புதுவையை இரண்டு வெவ்வேறு வழிகளில் அணுகலாம். ஒன்று கிழக்கு கடற்கரைச் சாலை, மற்றொன்று புறவழிச்சாலை ஆகும். இந்த புறவழிச்சாலை தான் சென்னையை மற்ற தமிழக நகரங்களுடன் இணைக்கிறது. இது மிகவும் பரபரப்பான சாலைகளில் ஒன்றாகும். இந்த வழியில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம் சென்று புதுவையை அடையலாம். இ.சி.ஆர் சாலையில் கல்பாக்கம், மரக்காணம் சென்று புதுவையை அடையலாம். ஆனால், இந்த 2 வழிகளில் பெரும்பாலான மக்கள் புதுவைக்கு செல்ல பயன்படுத்துவது இ.சி.ஆர் சாலையை தான்.

எதனால் இ.சி.ஆர். சாலையை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்

கிழக்கு கடற்கரைச் சாலை ஒட்டிய திருவான்மியூர், சோழிங்கநல்லூர், படூர், கிண்டி ஆகிய இடங்களில் தான் சென்னையின் ஐ.டி கம்பெனிகள் எல்லாம் உள்ளன. அங்கு வேலை பார்க்கும் நபர்கள் சுலபமாக புதுவைக்கு செல்ல வசதியாக இருப்பது இ.சி.ஆர் சாலை தான். அதுமட்டுமில்லாமல் இந்த சாலை தான் வட மற்றும் மத்திய சென்னைக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் சென்னையிலிருந்து புதுவை வழியாக கடலூருக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது.

puducherrytocuddalorenewtrainroute

கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகள்

இதற்கான ஆரம்ப கட்ட சர்வே பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதன்பிறகு, இத்திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்ததால், திட்ட மதிப்பீடு ரூ.1,500 கோடியை தாண்டியது. கடந்த மத்திய பட்ஜெட்டிலும் ரூ.50 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதனால், பெரிய அளவில் பணிகள் நடக்கவில்லை. எனவே, இத்திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கி விரைவாக செயல்படுத்த ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலை விபத்துக்கள் குறையும்

சென்னையிலிருந்து கடலூருக்கும், கடலூரில் இருந்து சென்னைக்கும் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். குறிப்பாக வேலை நிமித்தமாக கடலூர் மற்றும் புதுச்சேரி இடையே பெருவாரியான மக்கள் பயணிக்கின்றனர். அதனால் தினமும், இப்பகுதி போக்குவரத்து நெரிசலால் அவதிப்படுவதோடு, சாலை விபத்துக்களிலும் விலைமதிப்பற்ற உயிர்களை இழக்கிறது. ரயில் பாதை வந்துவிட்டால் தினமும் இரு இடங்களுக்கும் பயணம் செய்யும் பயணிகள் ரயிலை தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ravel to Pondicherry from chennai in train via ECR

கோரிக்கை விடுத்துள்ள ரயில்வே அதிகாரிகள்

இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ''சென்னை - கடலூர் (வழி: மகாபலிபுரம், புதுச்சேரி) ரயில் திட்டத்துக்கு அதிக அளவில் நிதி தேவைப்படுகிறது. மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கும் நிதியை கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். வரும் பட்ஜெட்டிடல் இத்திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கக்கோரி வலியுறுத்தி இருக்கிறோம்'' என்றனர். தமிழகம், புதுச்சேரிக்கு முக்கிய ரயில் பாதை திட்டமாக இது உள்ளது. எனவே, வரும் மத்திய பட்ஜெட்டில், இந்த திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பணிகள் விரைவில் துவக்கம்

சென்னை - புதுச்சேரி இடையே சர்வே பணி 80 சதவீதவீம் முடிந்த பின்னர், புதுச்சேரி கடலுார் வரையிலான 22 கி.மீ துார ரயில் பாதைக்கு சர்வே செய்யப்பட்டது. ஆனால், ரயில் பாதை குறுக்கிடும் இடங்களை மறு ஆய்வு செய்ய, ரயில்வே துறைக்கு புதுச்சேரி மாநில அரசு கோரிக்கை விடுத்தது. அதனையும் ஏற்று ரயில்வே நிர்வாகம் சர்வே பணியை முடித்த நிலையில், பணிகள் கடந்த 2018 மீண்டும் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. அதன் பின்னர் இப்பொழுது தான் பணிகளை விரைந்து முடிக்க மறு உத்தரவு போடப்பட்டுள்ளது.

More News

    Read more about: chennai travel news tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+