Search
  • Follow NativePlanet
Share
» »அதிக அளவில் மாசடைந்து வரும் தமிழக ஆறுகள் - இவற்றை தடுக்க நாம் என்ன செய்வது?

அதிக அளவில் மாசடைந்து வரும் தமிழக ஆறுகள் - இவற்றை தடுக்க நாம் என்ன செய்வது?

தமிழ்நாட்டில் ஏன் இந்திய அளவில் அதிகம் மாசுபட்ட நதி என்றால் அது நம் கூவம் தான். ஆனால், இப்போது அதுவல்ல பிரச்சினை. தமிழ்நாட்டின் மற்ற முக்கிய ஆறுகளும் அதிக அளவில் மாசடைந்து வருவதாக லோக்சபாவின் பட்ஜெட் கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின் போது இந்த கவலைகள் முன் வைக்கப்பட்டன. தொழில்துறை வெளியேற்றம், கழிவுநீர், விவசாய கழிவுகள் மற்றும் பிற மனித நடவடிக்கைகளால் தமிழ்நாட்டின் பல ஆறுகள் பெரிதும் மாசுபடுகின்றன. இப்படியே சென்றால், தமிழ்நாட்டில் நதிகளே இல்லாமல் போய்விடும். இதற்கெல்லாம் என்ன காரணம்?

Polluted river in Tamil Nadu

மோசமான அளவில் பாதிக்கப்பட்டு வரும் தமிழக நதிகள்

தமிழகத்தில் அதிக அளவில் மாசடைந்து வரும் நதிகளின் பட்டியல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ், தமிழகத்தில் அதிக மாசடைந்த நதிகளின் பெயர்களை வெளியிட்டார். அமைச்சரின் கூற்றுப்படி, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான நீரின் தர தரவுகளின் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டில் 311 மாசுபட்ட நதி நீட்டிப்புகளை (PRS) அடையாளம் கண்டுள்ளது. இவற்றில், தமிழ்நாடு பல்வேறு முன்னுரிமை வகுப்புகளில் அடையாறுடன் 10 PRS ஐப் பெற்றுள்ளது. கூவம், திருமணிமுத்தாறு மற்றும் வசிஷ்ட நதிகள் அவற்றின் முக்கியமான மாசு அளவுகள் காரணமாக முன்னுரிமை I இன் கீழ் வருகின்றன.

அதிக அளவு மாசடைந்த நதிகளின் பட்டியல்

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது நாம் அனைவரும் சுலபமாக யூகிக்கும் கூவம் நதி தான். ஆவடியில் இருந்து சத்யா நகர் செல்லும் வழியில் இருக்கும் கொவ்வம் நதியில் BOD 345 ஆகும். இது 1 சதவீதம் கூட மக்கள் பயன்பாட்டிற்கு உதவாது. சேலத்தில் ஓடும் வசிஷ்டா நதி BOD 230 உடன் இரண்டாவது இடத்திலும், அதே சேலத்தில் பாயும் திருமணிமுத்தாறு BOD 56 உடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. BOD 40 உடன் தாம்பரத்திலிருந்து நந்தனம் செல்லும் அடையாறு நதியும் மிகவும் மாசடைந்தா நதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

மாசடைந்த நதிகளை மீட்க அரசு என்ன செய்யலாம்

மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்தி தொழிற்சாலைகள் கழிவு சுத்திகரிப்பு தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்து மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆறுகளில் சேர்வதைத் தடுக்க நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை உருவாக்கி பராமரிக்க வேண்டும். கரிம உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த விவசாயிகளை ஊக்குவிக்கவும், மேலும் விவசாய நீரோட்டத்தைக் குறைக்க சிறந்த நீர்ப்பாசன நடைமுறைகளைச் செயல்படுத்த வேண்டும். தூர்வாருதல், திடக்கழிவுகளை அகற்றுதல் மற்றும் ஆற்றங்கரைகளை மறுசீரமைத்தல் உள்ளிட்ட மாசுபட்ட ஆறுகளை சுத்தம் செய்து புத்துயிர் பெறுவதற்கான முயற்சிகளை தொடங்க வேண்டும்.

தொழில்துறையில் இவற்றை செய்தால் நன்றாக இருக்கும்

அனைத்து தொழில்களும், குறிப்பாக ஜவுளி மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் போன்ற அதிக மாசுபடுத்தும் துறைகளில் திறமையான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (ETPs) இருப்பதை உறுதிசெய்து, அவற்றை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். அனைத்து கழிவுநீரும் ஆலைக்குள் சுத்திகரிக்கப்பட்டு, ஆறுகளில் வெளியேற்றப்படுவதைத் தடுக்கும் ZLD அமைப்புகளை தொழிற்சாலைகள் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.

பொதுமக்களுக்கு இதில் பங்கு உண்டா?

நிச்சயம் நதிகளை பாதுகாப்பதில் பொதுமக்களுக்கு முக்கிய பங்கு உண்டு. நதி மாசுபாட்டின் தாக்கம் மற்றும் நதிகளை சுத்தமாக வைத்திருப்பதன் முக்கியத்துவம் குறித்து ஊடக பிரச்சாரங்கள், பட்டறைகள் மற்றும் பள்ளி நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புனறு ஏற்படுத்துவது அவசியம். உள்ளூர்வாசிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களை உள்ளடக்கிய வழக்கமான நதிகளை சுத்தம் செய்யும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நதிகளை தூய்மையாக வைத்திருக்க முயற்சி செய்வது பாராட்டுக்குரியது. ஆறுகளில் சேரும் திடக்கழிவுகளின் அளவைக் குறைக்க, வீட்டுக் கழிவுகளை முறையாக அகற்றி மறுசுழற்சி செய்வதை நாம் பின்பற்ற வேண்டும்.

More News

    Read more about: tamil nadu river
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+