Search
  • Follow NativePlanet
Share
» »விதிகளை தளர்த்திய இந்திய ரயில்வே – இனி ரயில் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை சுலபமாக புக் பண்ணலாம்!

விதிகளை தளர்த்திய இந்திய ரயில்வே – இனி ரயில் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை சுலபமாக புக் பண்ணலாம்!

அவ்வப்போது பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் பொருட்டு பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே தனது சேவைகளை தொடர்ந்து விரிவுபடுத்தி மேம்படுத்தி வருகிறது. சமீபகாலமாக ரயில்வே தனது பல விதிகளை மாற்றியுள்ளது. புதிய விதியானது பொது மற்றும் நடைமேடை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதை எளிதாக்கும். அதாவது இனி பயணிகள் வீட்டை விட்டு வெளியே வராமலே முன்பதிவு செய்யப்படாத மற்றும் நடைமேடை டிக்கெட்டுகளைப் பெறலாம். எப்படி என்று தெரியுமா?

பயணிகளின் வசதிக்காக விதிகளை மாற்றும் இந்திய ரயில்வே

யணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே தனது சேவைகளை தொடர்ந்து விரிவுபடுத்தி மேம்படுத்தி வருகிறது. சமீபகாலமாக ரயில்வே தனது பல விதிகளை மாற்றியுள்ளது. RAC டிக்கெட்டுகளுக்கான காத்திருப்பு மற்றும் ரத்து செய்வதற்கான விதிகளை ரயில்வே மாற்றிய அதே வேளையில், வந்தே பாரத் ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் தண்ணீர் பாட்டில்கள் தொடர்பான விதிகளையும் மாற்றியுள்ளது. தற்போது முன்பதிவு செய்யப்படாத மற்றும் நடைமேடை டிக்கெட்டுகளுக்கான புதிய வசதியை ரயில்வே தொடங்கியுள்ளது. புதிய வசதி பொது டிக்கெட் மற்றும் நடைமேடை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு நிவாரணம் அளிக்கும்.

nowyoucanbookticketandplatformtickets

UTS இல் ஒரு புதிய வசதியை தொடங்கிய ரயில்வே

முன்பதிவு செய்யாத பயணச்சீட்டில் பயணிக்கும் ரயில் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் பெரும் நிவாரணம் அளித்துள்ளது. ரயில்வே UTS இல் ஒரு புதிய வசதியை தொடங்கியுள்ளது, அதாவது முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் அமைப்பு. புதிய விதியின் கீழ், எந்த ரயில் நிலையத்திலிருந்தும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை நீங்கள் எங்கிருந்தும் முன்பதிவு செய்ய முடியும். டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு வசதியாக ரயில்வே இந்த முடிவை எடுத்துள்ளது. மொபைல் செயலி மூலம் பயணிகள் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் மற்றும் நடைமேடை டிக்கெட்டுகளை எந்த நிலையத்திலிருந்தும் முன்பதிவு செய்யலாம் என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

எங்கிருந்து வேணாலும் டிக்கெட்டுகளை பெறலாம்

பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, மொபைல் செயலியில் UTS இல் பயண டிக்கெட் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட் ஆகிய இரண்டிற்கும் வெளிப்புற வரம்பு ஜியோ ஃபென்சிங் தூரம் என்ற கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது, இப்போது நீங்கள் எங்கிருந்தும் எந்த ரயில் நிலையத்திற்கும் உங்கள் பொது மற்றும் நடைமேடை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

வெளிப்புற வரம்பை நீக்கியுள்ள இந்திய ரயில்வே

தற்போது மொபைல் செயலியில் UTS மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வெளிப்புற ஜியோ ஃபென்சிங் தூரத்தின் கட்டுப்பாடு 20 கி.மீ. அதாவது, அந்த ரயில் நிலையத்திலிருந்து 20 கி.மீ தொலைவிற்குள் மட்டுமே எந்தவொரு பயணியும் பொது அல்லது நடைமேடை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும், ஆனால் இப்போது ரயில்வே இந்த வெளிப்புற வரம்பை நீக்கியுள்ளது. இதன் மூலம் பயணிகள் பெரும் பலனை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இனி நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதில்லை

இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டதன் மூலம், பொது மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை வீட்டில் இருந்தோ அல்லது அலுவலகத்தில் இருந்தோ, எங்கிருந்தும் முன்பதிவு செய்ய முடியும். நீங்கள் எந்த நிலையத்திலிருந்து எந்த நிலையத்திற்கும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இணைய இணைப்பு உள்ள மொபைல் போன்களில் இருந்து UTS டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் உதவியுடன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதன் மூலம், பிளாட்பார்ம் டிக்கெட்டுகளையோ முன்பதிவு செய்யாத டிக்கெட்டுகளையோ முன்பதிவு செய்ய நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதில்லை.

More News

    Read more about: irctc indian railways
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+