Search
  • Follow NativePlanet
Share
» »புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை அலங்கரிக்கப்போகும் சோழ வம்சத்து தங்க செங்கோல் – விரைவில் பிரமாண்டமாக திறப்புவிழா!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை அலங்கரிக்கப்போகும் சோழ வம்சத்து தங்க செங்கோல் – விரைவில் பிரமாண்டமாக திறப்புவிழா!

சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 3 ஆண்டுகளாக ரூ.862 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் பதிய நாடாளுமன்ற கட்டிடத்தை மே 28 அன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கத்தினாலான சோழ வம்சத்தின் சின்னமான செங்கோல் நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டைய இந்தியாவின் சக்தி, மரியாதை, கௌரவம் மற்றும் அரசாட்சியின் மீது மக்கள் கொண்ட அன்பின் நிமித்தமாக சோழ வம்சத்து செங்கோல் நாடாளுமன்றத்தை அல்ங்கரிக்கப்போகிறது. இதனைப் பற்றிய கூடுதலான சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

singolcholadynasty

சோழர் காலத்து செங்கோல்

பண்டைய தென்னிந்தியாவில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் வளமான பேரரசுகளில் ஒன்றான சோழ வம்சத்தின் வரலாற்றில் செங்கோல் சின்னம் பெரும் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. சோழர்களின் கம்பீரமான வலிமை மற்றும் ஏகாதிபத்திய அதிகாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சின்னமாக இந்த செங்கோல் அவர்களின் ஆட்சி, கலை சிறப்பு மற்றும் கலாச்சார சாதனைகளின் சாரத்தை உள்ளடக்கியுள்ளது.

தமிழக மக்கள் பரிசாக கொடுத்த செங்கோல்

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்ற போது, ஆகஸ்ட் 14, 1945, சுமார் 10:45 மணியளவில் நேரு இந்த செங்கோலை தமிழக மக்களிடமிருந்து ஏற்றுக்கொண்டார். அன்று அதிகாரப் பரிமாற்றமாகப் பயன்படுத்தப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பொக்கிஷம், நீண்ட காலமாக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. இது ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்த நாட்டு மக்களுக்கு அதிகாரம் மாறியதற்கான அறிகுறியாகும்.

singolcholadynasty

வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த செங்கோல்

ஆங்கிலேயர்கள் அதிகாரத்தை இந்தியர்களிடம் ஒப்படைப்பார்கள் என்று முடிவெடுக்கப்பட்டபோது, மவுண்ட்பேட்டன் பிரபு பண்டித நேருவிடம் அதிகார பரிமாற்றத்தின் பிரதிநிதித்துவமாகப் பயன்படுத்தப்பட வேண்டிய கலாச்சார சின்னம் பற்றி கேட்டார். இருப்பினும், நேருவிற்கு அது குறித்து உறுதியாக தெரியவில்லை, அவர் மற்றவர்களுடன் விவாதிக்க சிறிது நேரம் கேட்டார். சி ராஜகோபாலாச்சாரியாரிடம் இது குறித்து விவாதித்தார். அவர் பல வரலாற்று நூல்களைப் படித்து ஜவஹர்லால் நேருவுக்கு செங்கோல் பற்றி தெரிவித்தார்.

singolcholadynasty

தங்கம், வெள்ளியுடன் தனித்துவமான கலை படைப்பு

அன்றைய காலகட்டத்தில் ரூ. 15000 மதிப்பு கொண்ட இந்த தங்க செங்கோல் நகைகள் பதிக்கப்பட்டு தனித்துவமாக உருவாக்கப்பட்டது. சிவபெருமானின் காளை வாகனமான நந்தி செங்கோலின் உச்சியில் அமர்ந்துள்ளார். நந்திய பெருமான் நீதியின் பாதுகாவலர் ஆவார். இந்த தங்க செங்கோல் 5 அடி நீளம் கொண்டது, இது மேலிருந்து கீழ் வரை செழுமையான வேலைப்பாடுகளுடன் இந்திய கலையின் தலைசிறந்த படைப்பாக உள்ளது.

singolcholadynasty

நாடாளுமன்றத்தை அலங்கரிக்கப்போகும் செங்கோல்

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியர்களுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதன் அடையாளமாக இருந்ததால், சுதந்திரத்தின் 'குறிப்பிடத்தக்க வரலாற்று' சின்னமாக 'செங்கோல்' அறிமுகப்படுத்தப்படும் என்று கூறினார். சோழ வம்சத்தில் இருந்து வந்த செங்கோல் புதிய பாராளுமன்றத்தில் வைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். லோக்சபா சபாநாயகர் மேடைக்கு அருகில், அமிர்த காலின் தேசிய அடையாளமாக இது பிரகாசிக்கப் போகிறது.

singolcholadynasty

பழைய நாடாளுமன்ற கட்டிடம்

சுமார் 100 ஆண்டுகள் பழமையான தற்போதைய பாராளுமன்ற கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை குறித்த அச்சத்தில் இருந்து புதிய பாராளுமன்ற கட்டிடம் பற்றிய யோசனை உருவானது. பழைய பாராளுமன்றம் ஜனவரி 1927 இல் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால் திறக்கப்பட்டது.

புதிய பாராளுமன்ற கட்டிடம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

1. பிரதமர் நரேந்திர மோடி 10 டிசம்பர் 2020 அன்று கட்டிடத்தின் அடிக்கல்லை நாட்டினார்

2. இது 1272 இடங்களைக் கொண்டிருக்கும், அதில் 888 மக்களவைக்கும், 384 இடங்கள் ராஜ்யசபாவிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

3. கட்டிடம் சுமார் 150 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டதாக கூறப்படுகிறது.

4. புதிய கட்டிடம் முக்கோண வடிவில் உள்ளது மற்றும் பழைய கட்டிடத்தை விட 10% சிறியது.

5. கட்டிடத்தின் தலைமை கட்டிடக் கலைஞர் பிமல் படேல்.

6. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டும் ஒப்பந்ததாரர் டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட்.

7. கட்டுமானத்தின் மொத்த செலவு ரூ.862 கோடியாகும்.

8. புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் ஒரு முக்கியமான இடத்தில் "செங்கோல்" என்ற வரலாற்றுச் செங்கோல் வைக்கப்படும்.

More News

    Read more about: travel news tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+