இந்திய ரயில்வே என்பது உலகின் நான்காவது பெரிய ரயில்வே வலையமைப்பாகும். தினசரி கோடிக்கணக்கான மக்கள் இதில் பயணம் செய்கிறார்கள். இதில் மூத்த குடிமக்கள் என அழைக்கப்படும் 60 வயதுக்கும் மேற்பட்ட நபர்களுக்கான பாதுகாப்பான, வசதியான மற்றும் மரியாதையுள்ள பயண அனுபவத்தை வழங்க பல சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிறப்பு டிக்கெட் தள்ளுபடி :
மூத்த குடிமக்களுக்கு இந்திய ரயில்வே முக்கியமான தள்ளுபடி திட்டம் ஒன்றை வழங்குகிறது.
- ஆண்களுக்கு: டிக்கெட் கட்டணத்தில் 40% தள்ளுபடி
- பெண்களுக்கு: 60% தள்ளுபடி
- இது Sleeper, AC, மற்றும் Second Seating வகைகளில் வழங்கப்படுகிறது.
- கோவிட்டிற்கு பிறகு கடந்த சில ஆண்டுகளாக இந்த தள்ளுபடி வசதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, ஆனால் மீண்டும் தொடரப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
சிறப்பு முன்அதிகாரம் (Quota)
அனைத்து ரயில்களிலும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறன் கொண்ட பயணிகளுக்கு பயண கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. அதே போல் டிக்கெட் முன்பதிவிலும், கீழ் இருக்கை தேர்விலும் இவர்களுக்கு முன்னுரிமை வழங்கபடுகிறது. இதனால் மற்ற பயணிகளைப் போல் டிக்கெட் கிடைக்காமல் இருப்பதற்கான வாய்ப்புகள் மூத்த குடி மக்களுக்கு குறைவு தான்.
பயண வசதிகள்
ஏறுவதற்கும் இறங்குவதற்கும் உதவிச் சேவை: மாடிகளுக்கு ஏறுதல், பெட்டிகளை எடுத்துச் செல்லுதல் போன்றவை சிரமம் இல்லாமல் இருக்க மூத்த நபர்களுக்கு ரயில்வே பணியாளர்கள் உதவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீல் சேர் வசதி (Wheelchair/Cart):
பல முக்கிய ரயில் நிலையங்களில் வீல்சேர் சேவை கிடைக்கிறது. இது முன்பதிவு அல்லது நேரில் கோரிக்கையின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. அதே போல் நடக்க முடியாத, தங்களின் பெட்டிகளை தூக்க முடியாதவர்களுக்காக பேட்டரி கார் வசதியும் அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் செய்யப்பட்டுள்ளது.
மும்பை, டில்லி, கோல்கத்தா மற்றும் சென்னை போன்ற நகரங்களில் உள்ள உள்ளூர் ரயில்களில் மூத்த குடிமக்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் உள்ளது. இதனால் அவர்கள் பயணத்தின் போது வசதியாக உட்கார இடம் கிடைக்கும்.
சிறப்பான காத்திருப்பு கூடங்கள் :
ரயில் பயணத்திற்கு முன்பும் பின் நேரங்களிலும் ஓய்வெடுக்க ரயில்வே நிலையங்களில் உள்ள Retiring Room-களில் மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை மற்றும் சலுகை கட்டணத்தில் வழங்கப்படுகிறது. இதில் A/C மற்றும் Non-A/C வகைகளும் உண்டு.
ஆன்லைன் வசதிகள்
மூத்த குடிமக்கள் IRCTC இணையதளம் மற்றும் மொபைல் செயலிகள் மூலம் தங்களுக்கான தள்ளுபடி மற்றும் முன்அதிகார வசதிகளை தேர்வு செய்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
பயணத்தின் போது பாதுகாப்பு
மூத்த குடிமக்கள் பயணத்தின் போது பாதுகாப்பான இருக்கை இடங்கள், மற்றும் சுற்றியுள்ள பயணிகளால் ஏற்படும் சிரமங்களிலிருந்து பாதுகாப்பு போன்றவற்றுக்கும் ரயில்வே துறையினர் விரைந்து செயல்படுகிறார்கள். ஹெல்ப்லைன் எண்கள், புகார் வசதிகள் ஆகியவை விரிவாக செயலியில் உள்ளன.
இந்திய ரயில்வே மூத்த குடிமக்கள் பயண அனுபவம் ஒரு சிரமமில்லாத, மரியாதையுள்ளதாக இருக்க வேண்டும் என்பதையே தலையாய நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.



Click it and Unblock the Notifications






