Search
  • Follow NativePlanet
Share
» »ரூ.1000 கோடி செலவில் அசத்தலாக மாறப்போகும் தாம்பரம் ரயில் நிலையம் - இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!

ரூ.1000 கோடி செலவில் அசத்தலாக மாறப்போகும் தாம்பரம் ரயில் நிலையம் - இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!

சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் முனையத்திற்கு பிறகு சென்னையில் ஒரு பெரிய முனையம் என்றால் அது தாம்பரம் தான். தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டு மக்கள் அதிக அளவில் தாம்பரம் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு போதிய வசதிகள் இல்லாததால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதனால், ரூ.1000 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளது. இதனால் சென்னை வாசிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்!

தாம்பரம் ரயில் நிலையத்தை சீரமைக்க முடிவு

சென்னையின் 3 வது ரயில்வே முனையமாக தாம்பரம் ரயில் நிலையம் இருந்தாலும், அங்கு பயணிகளுக்கு போதிய வசதிகள் இல்லாத நிலை நிலவுகிறது. இதனையடுத்து, அந்த ரயில் நிலையத்தின் மறு சீரமைப்பிற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு டெண்டர் விடப்பட்டது. அதனை தனியார் நிறுவனம் ஒன்று கைப்பற்றிய நிலையில், பணிகள் நடைபெறாமல் இருந்து வந்தது.

தொடர்ந்து அதிகரித்து வரும் குற்றச்சாட்டுக்கள்

சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவு காணப்படுவதனால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர், மேலும் பண்டிகை நாட்கள் தொடர் விடுமுறையில் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு செல்லக்கூடிய மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்து பயணிக்கும் நிலையில் ரயில் நிலையத்தில் போதிய வசதி இல்லை என தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

tambaramrailwaystation

தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில்கள்

சென்னையின் மையப்பகுதியாக தாம்பரம் உள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்துள்ளது, பேருந்து நிலையம் அருகில் இருப்பதினால் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்தை விட தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

பெரிய நகரமாக மாறிய தாம்பரம்

ஒரு காலத்தில் சென்னையின் புறநகர் பகுதியாக இருந்த தாம்பரம், கடந்த 20 ஆண்டுகளில் சென்னையின் மையப்பகுதி என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளது. சென்னை தற்போது தெற்கே செங்கல்பட்டு வரையிலும், மேற்கே ஸ்ரீபெரும்புதூர் வரையிலும், வடக்கே பொன்னேரி வரையிலும் வளர்ந்துள்ளது. கிழக்கில் மகாபலிபுரம் வரையிலும் சென்னை வளர்ந்துவிட்டது. சுமார் 60 கிலோமீட்டர் சுற்றளவுக்கு வளர்ந்துள்ள சென்னையின் மையப்பகுதி என்று சொல்லும் அளவிற்கு தாம்பரம் உருவெடுத்துள்ளது.

சமூகவலைத்தலங்களில் பரவி வரும் 3 டி புகைப்படம்

தற்போது டெண்டர் எடுத்த தனியார் நிறுவனம் ரயில் நிலைய மறுசீரமைப்பு 3 டி உத்தேச வரைபடத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது விரைவில் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகள் தொடங்க வேண்டும் என பயணிகளும் சமூக ஆர்வலர்களும் என அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர், தாம்பரம் ரயில் நிலையத்தின் 3 டி வரைபடம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

tambaramrailwaystation2

மிக அழகாக மாறப் போகும் தாம்பரம் ரயில் நிலையம்

தாம்பரம் ரயில் நிலையத்தின் உள்நுழைவு, வெளியேறும் பகுதி, ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் செல்லும் பகுதி, வேளச்சேரி சாலையில் ரயில் நிலையத்தின் வெளியேறும் பகுதி, உள்ளே வரும் பகுதி என எல்லாமே மிக அகலமாக மாறுகிறது. பசுமை பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது. ரயில் நிலைய கட்டிடங்கள் முழுமையாக ஐடி நிறுவனங்களை போல் பார்க்க மிக அழகாக மாற்றப்பட உள்ளது.

பல வசதிகளுடன் உருமாறப்போகும் ரயில் நிலையம்

அதுமட்டுமல்ல, ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ரயில் நிலையத்தின் 6 நடை மேடைகளையும் இணைத்து, டெர்மினல் கட்டிடம் கட்டப்படவுள்ளது. அதில் ஓய்வறை, கழிவறை, உணவகம், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தள நடைபாதை உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன.

More News

    Read more about: chennai tambaram news
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+