Search
  • Follow NativePlanet
Share
» »திருப்பதி பக்தர்களுக்கு ஒரு குட் நியூஸ் – இனி இந்த விஷயம் அன்லிமிடெட் தான்!

திருப்பதி பக்தர்களுக்கு ஒரு குட் நியூஸ் – இனி இந்த விஷயம் அன்லிமிடெட் தான்!

எத்தனை பிரசாதங்கள் இந்த உலகில் உள்ள கோயில்களில் வழங்கினாலும், திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்திற்கு பிறகு நமக்கு வழங்கப்படும் பிரசாதமான லட்டு எல்லாவற்றையும் விட ஸ்பெஷல் தான். எவ்வளவு தான் சாப்பிட்டாலும் திகட்டாத திருப்பதி லட்டுவுக்கு தனி மவுசு இருப்பதில் ஆச்சரியமில்லை. உங்களுக்காகவே திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏழுமலையான் பக்தர்களும், திருப்பதி லட்டு பிரியர்களும் இனி திருப்பதியில் எத்தனை லட்டு வேண்டுமானாலும் வாங்கி மகிழலாமாம். கட்டுப்பாடு இல்லாமல் எத்தனை வேணாலும் வாங்கி செல்லலாம் என்று TTD அறிவித்துள்ளது! இது உண்மையிலேயே மிகவும் சந்தோஷமான செய்தி தானே!

திருப்பதியில் இது வரை இருந்த வந்த நடைமுறைகள்

திருப்பதியில் தரிசன டிக்கெட்டுடன் இனி நீங்கள் லட்டு கவுன்ட்டருக்கு வந்தால் இன்று (செப்டம்பர் 2) முதல் எத்தனை லட்டுகளை வேண்டுமானாலும் அன்லிமிடெட்டாக வாங்கிக் கொண்டு செல்லலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் அறிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த ஒவ்வொருவருக்கும் இலவசமாக ஒரு லட்டு வழங்கப்படுவது வழக்கம். உங்களுக்கு அதிகப்படியான லட்டுக்கள் தேவைப்பட்டால் ஒரு லட்டுவுக்கு ரூ.50 வீதம் சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான லட்டுக்களை உங்கள் வீட்டிற்கு வாங்கிச் செல்லலாம் என்கிற வழக்கம் மட்டுமே இருந்தது.

tirumala

சுவாமி தரிசனம் செய்யாதவர்களுக்கு 2 லட்டுக்கள்

அதன் படி முன்னதாக திருப்பதி லட்டு வாங்க நீங்கள் விருப்பப்பட்டால் நீங்கள் ஒன்று ஏழுமலையான் தரிசனம் செய்திருக்க வேண்டும். அப்போது உங்களுக்கு ஒரு இலவச லட்டுவும், கூடுதலாக ரூ.50 செலுத்தி எக்ஸ்ட்ரா லட்டுக்களையும் பெற்றுக் கொள்ளலாம். அதே போல சுவாமி தரிசனம் செய்யாதவர்கள் ஆதார் டிக்கெட்டை காண்பித்து 2 லட்டுக்கள் வரை பெற்றுக் கொள்ளலாம். இப்படி தேவஸ்தானம் கவனமாக இருந்தும் கூட லட்டுக்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றன.

கள்ளச் சந்தையில் விற்பனையாகும் திருப்பதி லட்டுக்கள்

திருப்பதி ஏழுமையான் கோயிலில், கள்ளச் சந்தையில் லட்டு விற்பனையை தடுக்கும் வகையில், புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. திருப்பதி கோவிலில் தற்போது நாள் ஒன்றுக்கு 3.5 லட்சம் அளவில் லட்டுகள் விற்கப்படும் நிலையில், இதில் சுமார் 1 லட்சம் லட்டுகள் இடைத்தரகர்கள் மூலமாக வாங்கப்பட்டு வெளியிடங்களில் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், இதனை தடுக்கும் வகையில் ஆதார் முறையை அறிமுகப்படுத்தி உள்ளதாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tirupati laddu

இனி பக்தர்களுக்கு அன்லிமிடெட் லட்டு

இதனை தடுக்கும் வகையில் புதிய அறிவிப்பை திருப்பதை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதில், திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னா், பக்தா்கள் தங்களிடம் உள்ள தரிசன டிக்கெட்டை காட்டினால், ரூ.50 கட்டணத்தில் அன்லிமிடெட் எண்ணிக்கையில் லட்டு பிரசாதம் வாங்கிச் செல்லலாம். மேலும் தரிசனம் செய்யாமல் வரும் பக்தா்களுக்கு ஆதார் காட்டு அடிப்படையில் தலா 2 லட்டுக்கள் மட்டுமே வழங்கப்படும். இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்டு பிரியா்கள் மிகுந்து மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

tirumala1

பிரசாதத்தின் மகிமையை கெடுக்க வேண்டாம்

திருப்பதி லட்டுவுக்கு தனி மரியாதை இருக்கிறது, இது ஒரு இனிப்பு பொருள் அல்ல, பிரசாதம் என்றும், சிலர் சாமி கும்பிடாமலேயே திருப்பதி மலைக்கு வந்து ஏராளமான லட்டுக்களை வாங்கிச் சென்று அவற்றை கூடுதல் விலைக்கு விற்கிறார்கள். சிலர் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு வரும் நெருங்கிய உறவினர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்துவிடுகிறார்கள். பிரசாதமாக வழங்கப்படும் லட்டை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் TTD நிர்வாகத் தலைவர் திரு.சியாமளா ராவ் கூறியுள்ளார்.

More News

    Read more about: tirupati news laddu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+