• Follow NativePlanet
Share
» »சிறுத்தை தாக்குதலை தவிர்க்க திருப்பதி தேவஸ்தானம் கொண்டு வந்த அதிரடி மாற்றம்!

சிறுத்தை தாக்குதலை தவிர்க்க திருப்பதி தேவஸ்தானம் கொண்டு வந்த அதிரடி மாற்றம்!

உலகப்பிரசித்திப்பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஆண்டுதோறும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை புரிந்து வேங்கடேச பெருமானின் ஆசி பெற்று செல்கின்றனர். வருடத்தின் எல்லா நாட்களிலும் திருப்பதி ஏழுமலையான் கோவில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. திருமலைக்கு ஸ்ரீ வாரி மெட்டு, அலிப்பிரி மெட்டு ஆகிய நடைபாதைகளில் நடந்து சென்றும், பேருந்து மற்றும் சொந்த வாகனங்களில் சென்றும் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

பக்தர்கள் நடந்து செல்லும் பாதைகளில் அவ்வப்போது சிறுத்தை நடமாட்டம் தென்படுகிறது. சமீபத்தில் 5 வயது குழந்தை சிறுத்தை தாக்குதலுக்குட்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. சிறுத்தை மற்றும் பிற வன விலங்குகளால் பக்தர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை தவிர்க்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதன் மூலம் பக்தர்கள் இனி எந்த சிரமுமின்றி பயமின்றி நடைபாதைகளில் நடந்து செல்லலாம்!

1

5 வயது சிறுவனை தாக்கிய சிறுத்தை

திருப்பதி திருமலை நடைபாதையில் விலங்குகள் வருமோ என்ற அச்சமின்றி பக்தர்கள் படியேறலாம் என்றும் இரவில் செல்லும் போது கூட்டமாக செல்லுமாறும் ஆந்திர முதன்மை தலைமை வன பாதுகாப்பு அதிகாரி மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தியுள்ளார். சமீபத்தில் நடைபாதையில் சென்ற 5 வயது சிறுவனை தாக்கியது. சிறுத்தைகள் பொதுவாக இங்கு மக்களைத் தாக்குவதில்லை என்றும் இந்த சம்பவம் மிகவும் அரிதாகவே நடந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

வேலி அமைப்பது சாத்தியமில்லை

திருப்பதி திருமலைக்கு படிக்கட்டுகள் வழியாக செல்லும் பக்தர்கள் நடைபாதையை சுத்தமாக வைத்திருக்கும் படியும் முதன்மை தலைமை வன பாதுகாப்பு அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளனர். அலிப்பிரி நடைபாதையில் சிறுவனை சிறுத்தை தாக்கியது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்றும் நடைபாதையின் இருபுறமும் வேலி அமைப்பது சாத்தியமில்லை என்றும் சில மாற்று வழிகள் குறித்து பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வனப்பகுதியில் நடமாடும் விலங்குகள்

சில ஆண்டுகளுக்கு முன்பு நல்லமலையில் இருந்து புலிகள் வந்ததற்கான தடயங்கள் வனப்பகுதியில் கிடைத்ததாகவும், ஆனால் சமீப காலமாக இங்கு புலிகள் வந்ததற்கான பதிவுகள் இல்லை என்றும் தகவல் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். வனத்துறையோ அல்லது திருமலை திருப்பதி தேவஸ்தானமோ எவ்வளவு தான் கண்காணித்தாலும் அடர்ந்த வனப் பகுதியில் நடப்பதைக் கட்டுப்படுத்துவது சிறிய விஷயமல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

2

கிரீன்ஃபீல்ட் விரைவுச் சாலை

வனப்பகுதியில் விலங்குகள் நிரந்தர வசிப்பிடத்தை ஏற்படுத்தி வருவதாகவும் கடந்த காலத்தை விட யானைகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். திருமலையில் அமைக்கப்படும் புதிய கிரீன்ஃபீல்ட் விரைவுச் சாலை, விலங்குகள் கடப்பதை எளிதாக்கும் என்றும் கூறப்படுகிறது.

வனவிலங்குகளை தடுக்க முடியாது

யானைகள் மற்றும் பிற வன விலங்குகள் சுதந்திரமாக சுற்றித் திரிவதாகவும் அவற்றை எங்கும் தடுக்கும் சூழ்நிலை இல்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் வேலி அமைத்து வன விலங்குகள் சுதந்திரமாக செல்வதை தடுக்க முடியாது என்றும் கேமரா மற்றும் பொறிகள் அமைக்கப்பட்டு பிடிக்கப்பட்ட தாய் சிறுத்தை காட்டில் கொண்டு வந்து விடப்பட்டது.

செக்யூரிட்டி கார்டுகள்

தினமும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருகை தரும் பக்தர்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமான ஸ்ரீவாரி மெட்டு மற்றும் அலிப்பிரி மெட்டு ஆகிய நடைப்பாதைகளில் நடந்து சென்று சுவாமி தரிசிக்கின்றனர். நடைப்பாதைகளில் வன விலங்குகளின் வருகையை தடுக்க முடியாது, ஆனால் நாம் பாதுகாப்பாக இருக்கலாம். அதற்காக முன்னும் பின்னும் பக்தர்கள் நடந்து செல்லும் போது ஆங்காங்கே செக்யூரிட்டி கார்டுகள் நிறுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

More News

    Read more about: tirupati andhra pradesh
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+