Search
  • Follow NativePlanet
Share
» »வந்தே பாரத் உட்பட இந்தியாவில் ஓடும் பல ரயில்களின் கட்டணங்கள் விரைவில் குறைக்கப்படவுள்ளன!

வந்தே பாரத் உட்பட இந்தியாவில் ஓடும் பல ரயில்களின் கட்டணங்கள் விரைவில் குறைக்கப்படவுள்ளன!

மலிவான கட்டணத்தில் நீண்ட தூரம் வசதியாக பயணம் செய்ய உதவியாக இருப்பதால் தான் பெரும்பாலான இந்தியர்கள் ரயில் பயணத்தை சார்ந்து இருக்கின்றனர். இந்திய ரயில்வே நீராவி என்ஜினில் துவங்கி இன்று மலை ரயில், நீருக்கடியில் செல்லும் மெட்ரோ, உயரமான பாலங்களில் பயணிகள் ரயில், அதிவேக வந்தே பாரத், சொகுசு ரயில்கள் என இந்திய ரயில்வே உலகின் 4ஆவது நெட்வொர்க்காக கலக்கி வருகிறது. இந்நிலையில் தான் ஏழை மக்களும் பயன் பெற வேண்டும் என்கிற நோக்கத்துடன் வந்தே பாரத் உட்பட பல ரயில்களின் கட்டணம் குறைக்கப்படும் என்கிற தகவல் வெளிவந்துள்ளது!

சிறப்புகள் நிறைந்த வந்தே பாரத் ரயில்கள்

ஒரு முற்போக்கான மற்றும் தன்னிறைவு கொண்ட இந்தியாவின் அடையாளமாக பார்க்கப்படும், உள்நாட்டு அரை-ஒளி-வேக ரயில் பயணிகளுக்கு முற்றிலும் புதிய பயண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வேகம், பாதுகாப்பு மற்றும் சேவை ஆகியவை வந்தே பாரத் ரயிலின் தனிச்சிறப்புகளாக நம்பப்படுகிறது.

வெற்றிகரமாக செயல்படும் வந்தே பாரத்

உலகத்தரம் வாய்ந்த அம்சங்களுடன் கூடிய, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு வசதியான பயணத்தை உறுதியளிக்கிறது. முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், புது தில்லி மற்றும் வாரணாசி இடையே, பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 15, 2019 அன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் 25 வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

vandebharatwillbereducedsoon1

கூடிய விரைவில் ஸ்லீப்பர் வந்தே பாரத்

ரயில் பயணிகளின் அனுபவத்தை உயர்த்தியது மட்டுமின்றி ரயில்வே நெட்வொர்க்கின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையையும் மேம்படுத்தியுள்ள வந்தே பாரத் ரயில்கள் தற்போது அடுத்த கட்டத்தில் கால் எடுத்து வைக்கின்றன. இப்போது, இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காக டிசம்பர் 2024க்குள் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை அறிமுகப்படுத்த தயாராகி உள்ளது! இதன் மூலம் வசதியான மற்றும் விரைவான பயணம் பயணிகளுக்கு கிடைக்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

வந்தே பாரத் ரயில் கட்டணங்கள் குறைக்கப்படும்

பெங்களூரில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்த ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா வந்தே பாரத் ரயில்களில் டிக்கெட் கட்டணம் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார். வந்தே பாரத் ரெயிலில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயணம் செய்யும் வகையில் அதன் டிக்கெட் கட்டணத்தை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக பிரதமர் மோடியுடன் இரண்டு தினங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடதப்பட்டது. ரயில்வே துறையின் செயல்பாடும் ராணுவம் போன்றது. நாட்டில் ராணுவம் முதலிடத்தில் உள்ளது. ரயில்வே துறை 2 ஆவது இடத்தில் உள்ளது. அதற்கேற்ப 2 துறைகளின் செயல்பாடுகளும் இருக்கிறது என கூறினார்.

வந்தே பாரத் மட்டுமின்றி இந்தியாவின் பல முக்கிய ரயில்களின் கட்டணமும் விரைவில் குறைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது!

More News

    Read more about: irctc vande bharat news
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+