Search
  • Follow NativePlanet
Share
» »வந்தே மெட்ரோ சோதனை ஓட்டம் – சென்னையில் விரைவில் வந்தே மெட்ரோ ரயில்!

வந்தே மெட்ரோ சோதனை ஓட்டம் – சென்னையில் விரைவில் வந்தே மெட்ரோ ரயில்!

இந்தியாவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அரை அதிவேக வந்தே பாரத் ரயில்கள் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவின் ரயில்வே உள்கட்டமைப்பில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வெற்றிகரமான ஒருங்கிணைப்பைத் தொடர்ந்து, ரயில்வே இப்போது நாட்டின் தொடக்கமான வந்தே மெட்ரோவைத் தொடங்கத் தயாராகி வருகிறது. இந்நிலையில் சோதனை ஓட்டம் ஜூலை மாதம் நடைபெறும் என்றும், அதன் பிறகு சென்னையில் வந்தே பாரத் மெட்ரோ ஓரிரு மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன!

சென்னையில் தயாரிக்கப்பட்டு வரும் வந்தே மெட்ரோ

சென்னை ஐசிஎஃப் ஆலையில் 12 பெட்டிகள் கொண்ட வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளை முடித்து, வரும் ஜூலைக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகரின் தேவைக்கு ஏற்ப 16 பெட்டிகளை கொண்டதாகவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது.

எத்தனை வகையான வந்தே பாரத் ரயில்கள் உள்ளன?

இதுவரை சென்னை ICF இல் 58-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. இவற்றில், 50-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப் படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக, வந்தே மெட்ரோ ரயில், தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில், சரக்கு வந்தே பாரத் ரயில், அம்ரித் பாரத் ரயில் ஆகிய 4 வகைகளில் வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Vande metro trail run will be on july

இந்தியாவின் முக்கிய நகரங்களில் வந்தே மெட்ரோ

வந்தே மெட்ரோ ரயில்கள் 100 முதல் 250 கிலோமீட்டர் வரையிலான வழித்தடங்களிலும், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் 1,000 கிலோமீட்டருக்கும் அதிகமான வழித்தடங்களிலும் இயக்கப்படும். வந்தே மெட்ரோ ரயில்கள் சுமார் 124 நகரங்களை இணைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பிடதக்க வழித்தடங்களான திருப்பதி-சென்னை லக்னோ-கான்பூர், ஆக்ரா-மதுரா, டெல்லி-ரேவாரி, புவனேஸ்வர்-பாலசோர் மற்றும் ஆகியவை அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி சென்னையை இணைக்கும் வந்தே பாரத்

அதன்படி விரைவில் சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் எம்.ஜி.ஆர். சென்டிரலில் இருந்து அரக்கோணத்திற்கும் வந்தே மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் வரும் ஜூலையில் நடைபெற உள்ளது. திருப்பதி - சென்னையை இணைக்கும் வகையில் வந்தே மெட்ரோ ரயில் சேவைகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள் என்னென்ன

1. ரயிலில் ஏசி வசதி

2. பயணிகளைக் கவரும் வகையில் உள் அலங்காரம்

3. சொகுசு இருக்கைகள்

4. கண்காணிப்பு கேமரா

5. அதி நவீன கழிப்பறைகள்

6. தானியங்கி கதவுகள்

உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும். இந்த ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் 100 பேர் அமர்ந்து செல்லலாம். 200 பேர் நிற்கமுடியும்.

இந்தியாவிற்குள் குறுகிய தூரப் பயணத்திற்கு திறமையான, வசதியான மற்றும் அடிக்கடி ரயில் இணைப்பை வழங்குவதில் வந்தே மெட்ரோ ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது!

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+