Search
  • Follow NativePlanet
Share
» »உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அரங்கேறும் இந்தியா ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி – சுவாரஸ்ய தகவல்கள்!

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அரங்கேறும் இந்தியா ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி – சுவாரஸ்ய தகவல்கள்!

நாடு முழுக்க ஒரே பேச்சு தான், இந்தியா உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை பழித் தீர்க்குமா? அது ஒரு பக்கம் இருக்க, அகமதாபாத்தில் அமைந்துள்ள 1,32,000 அமரக்கூடிய உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியம் நோக்கி உலகம் முழுக்க உள்ள நட்சத்திரங்களும், முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களும், இந்தியாவின் பல்வேறு பகுதிளிலிருந்து ரசிகப் பெருமக்களும் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்! இதனால் ஹோட்டல், விமான டிக்கெட் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது!

தோற்காத இந்திய அணி

அக்டோபர் 5 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கிய கிரிக்கெட் உலகக்கோப்பை 2023 போட்டிகள் இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்க தேசம் என மொத்தமாக 10 அணிகள் கலந்து கொண்டன. ரோஹித் ஷர்மா தலைமையில் இருக்கும் நம் இந்திய அணி இதுவரை நடந்த லீக் போட்டிகளில் ஒரு முறை கூட தோற்காமல், அரையிறுதியிலும் வென்று வெற்றிகரமாக இறுதிப் போட்டியில் கால் எடுத்து வைத்துள்ளது.

indiavsaustralia

நவம்பர் 19 - இந்தியா ஆஸ்திரேலியா பலப்பரீட்சை

கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழும் 5 முறை உலகக்கோப்பையை தன் வசப்படுத்திய ஆஸ்திரேலிய அணி 8 வது முறையாக உலகக்கோப்பை இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது. ஏற்கனவே 2003 ஆம் ஆண்டு கங்குலி தலைமையிலான சச்சின், டிராவிட் உட்பட சிறந்த வீரர்கள் அடங்கிய இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவை இறுதிப் போட்டியில் எதிர் கொண்டு தோற்றுப் போனது. 2015 ஆம் ஆண்டு M.S தோனி தலைமையிலான அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றுப் போனது. இப்படி உலகக்கோப்பை என்றாலே நமக்கு கசப்பான அனுபவங்களை வழங்கிய ஆஸ்திரேலிய தற்போதைய இந்திய அணி நன்கு பாடம் புகட்ட வேண்டும் என்பது தான ஒட்டு மொத்த இந்தியர்களின் ஆசை.

அகமதாபாத்தில் உயர்ந்த விமான மற்றும் ஹோட்டல் கட்டணம்

உலகக் கோப்பை அட்டவணை வெளியிடப்பட்டதில் இருந்து, போட்டி டிக்கெட்டுகள், ஹோட்டல்கள் மற்றும் அகமதாபாத்தில் தங்குவதற்கான தேவை அதிகரித்துள்ளது. 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா வந்துள்ள நிலையில், கிரிக்கெட் ஆர்வலர்கள் டிக்கெட்டைப் பெற்று மைதானத்திற்கு ஓடி, அணி போட்டியிடுவதைப் பார்க்கவும், கோப்பையை வெல்வதற்கான இறுதி மற்றும் மிக முக்கியமான படியை எடுப்பதற்கும் உற்சாகமாக உள்ளனர். எவ்வளவு ஆனாலும் சரி பார்த்துவிட வேண்டும் என்ற முடிவுடன் தான் ரசிகர்கள் இருக்கின்றனர்.

உலக நட்சத்திரங்கள் சங்கமம்

இதுவரை உலகக்கோப்பை வென்ற அனைத்து கேப்டன்களையும் 2023 இறுதிப் போட்டிக்கு ICC அழைத்துள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனிஸுக்கும் இந்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டியை ஒரு கோலாகலமான திருவிழாவாக மாற்ற பல ஏற்பாடுகள் செயப்பட்டு வருகின்றன. ஏற்கனவே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பிரபல கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்கம், சச்சின் டெண்டுல்கர், கியாரா, சித்தார்த், ஷாஹித் கபூர், ரன்பீர் கபூர் போன்ற பல நட்சத்திரங்கள் அரை இறுதியில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரை இறுதிப் போட்டியை தாண்டிய நட்சத்திர பட்டாளங்களை இறுதிப் போட்டியில் நாம் எதிர்பார்க்கலாம்.

indiaworldcupfinal

அகமதாபாத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் காண இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் அகமதாபாத் செல்ல உள்ளனர். பார்வையாளர்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்தின் தீவிர நெரிசல் நிச்சயமாக கூட்டமாகவும், குழப்பமாகவும், நிர்வகிக்க கடினமாகவும் இருக்கும். இதனால் குஜராத் அரசு ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆலோசனை வழங்கிய விமான நிலையம்

சமீபத்தில், சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் ஒரு பயண ஆலோசனையை வழங்கியது, பயணிகளை பயண நாளில் கூடுதல் நேரத்தை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது. விமான நிலையத்திற்குச் செல்வதற்கும் வெளியே செல்வதற்கும் பாதுகாப்புச் சோதனைகள் மற்றும் பிற சம்பிரதாயங்கள் மற்றும் விதிகளை மேற்கொள்வதற்கான கூடுதல் நேரம் ஆகும். அதிக கூட்டம் மற்றும் இடையில் தாமதம் ஏற்படும் வாய்ப்புகளை கருத்தில் கொண்டு, முன்கூட்டியே விமான நிலையத்தை அடைவது சிறந்த யோசனையாகும்.

கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப் போட்டியை காண உங்களுடைய பிளான் என்ன?

More News

    Read more about: travel news ahmedabad
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+