Search
  • Follow NativePlanet
Share
» »உலகிலேயே மிக உயரமான உத்தரகாண்டின் துங்கநாத் சிவன் கோவில் மெல்ல மெல்லமாக சாய்ந்து வருகிறது!

உலகிலேயே மிக உயரமான உத்தரகாண்டின் துங்கநாத் சிவன் கோவில் மெல்ல மெல்லமாக சாய்ந்து வருகிறது!

கிட்டத்தட்ட 5000 ஆண்டுகள் பழமையான துங்கநாத் சிவன் கோவில் உத்தரகாண்டின் உச்சியில் அமைந்துள்ளது. இது தான் உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் சிவன் கோவிலாகும். ஐந்து பஞ்ச கேதார கோயில்களில் ஒன்றான துங்கநாத் சிவன் கோவிலுக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர். 12,800 அடி உயரத்தில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கர்வால் மலையில் அமைந்துள்ள இந்த புனித ஸ்தலம் மெல்ல மெல்லமாக சாய்ந்து கொண்டே வந்து இப்பொழுது 5-6 டிகிரி சாய்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. கோவில் வளாகத்தில் உள்ள சிறிய கட்டமைப்புகள் 10 டிகிரி சாய்ந்து இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது யாத்ரீர்கர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

choptatungnath

இமயமலையில் குடிகொண்டிருக்கும் சிவபெருமான்

இந்து புராணங்களின் படி, சிவபெருமான் பார்வதி தேவியுடன் கயிலாயத்தில் வசிப்பதாக நம்பப்படுகிறது. இமயமலையை சுற்றியுள்ள சிவன் கோவில்களில் சிவபெருமானின் ஆசி நீக்கமற நிறைந்து இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு சென்று வரும் யாத்ரீகர்களும் எம்பெருமானை உணர்ந்த பின்னரே வீடு திரும்புவதாக கூறுகின்றனர். இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள முக்கிய கோவில்களில் உத்தரகாண்டின் துங்கநாத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலும் ஒன்றாகும்.

tunganath

சிவபெருமானின் உடலும் பஞ்ச கேதார் கோவில்களும் ஒன்று

துங்கநாத்தில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான சிவன் கோவில் பாண்டவர்களால் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது. மகாபாரத போரில் கௌரவர்களை வதம் செய்த தோஷத்திற்காக சிவபெருமானிடம் மன்னிப்பு வேண்டி வந்த பாண்டவர்களை சந்திக்க விரும்பாத சிவபெருமான் காலை வடிவில் உருமாறினார். அவரது உடலின் ஒவ்வொரு பகுதியுடன் தொடர்புடைய இடங்களே 'பஞ்ச கேதார்' ஆகின. துங்கநாத்தில் கைகள் காணப்பட்டன, கேதார்நாத்தில் அவரது கூம்பு; தலை ருத்ரநாத்திலும், தொப்புளும் வயிறும் மத்தியமஹேஸ்வரிலும், தலைமுடி கல்பேஸ்வரிலும் தோன்றின.

tunganath

சாய்ந்து கொண்டு வரும் உலகின் மிக உயரமான கோவில்

இந்திய தொல்லியல் துறை (ASI) நடத்திய ஆய்வில் டேராடூனில் உள்ள துங்கநாத் கோயில் சாய்ந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 12,800 அடி உயரத்தில் வடக்கு நோக்கி அமைந்துள்ள இந்த கோயில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கர்வால் மலையில் அமைந்துள்ளது. துங்கநாத் சிவன் கோவில் 5-6 டிகிரி சாய்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. கோவில் வளாகத்தில் உள்ள சிறிய கட்டமைப்புகள் 10 டிகிரி சாய்ந்து இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவிலை காக்க முயற்சி எடுத்து வரும் அதிகாரிகள்

டேராடூனில் உள்ள துங்கநாத் கோவிலை பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக பெயரிட ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவில் சாய்ந்து கொண்டே வருகிறது என்ற செய்தி அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. முதலில் இந்த சாய்வுக்கான மூல காரணத்தை கண்டுபிடித்து உடனடியாக சரி செய்ய முடியுமா என்றும், துங்கநாத் சன்னதியை முழுமையாக ஆய்வு செய்யவும் அதிகாரிகள் துங்கநாத் விரைந்துள்ளனர்.

tunganath

கோவிலைப் பற்றிய சில செய்திகள்

1. இந்த கோவிலை ஆதி சங்கராச்சாரியார் கண்டுபிடித்தார், இப்போது இந்த கோவிலின் பூசாரி மக்கு கிராமத்தின் உள்ளூர் பிராமணர் ஆவார்.

2. கோயில் 3,680 மீ (12,073 அடி) உயரத்தில் அமைந்துள்ளது, அதனால் கோயிலின் முன்புறத்தில் இருக்கும் பனி எப்போதும் உறைந்த நிலையில் இருக்கும்.

3. வருடத்தில் 6 மாதங்கள் மட்டுமே இந்த ஆலயம் திறக்கப்படும் மற்றும் மீதமுள்ள நேரங்களில் துங்கநாத்தில் உள்ள சிவபெருமானின் அடையாளமான சிலை துங்கநாத்திலிருந்து 19 கிமீ தொலைவில் உள்ள முக்குமாத்திற்கு மாற்றப்படுகிறது.

4. ஸ்ரீ துங்கநாத்தின் டோலி முகுமாத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி ஆண்டு அமர்வுக்காக துங்கநாத் கோயிலை அடைகிறது.

5. துங்கநாத் கோயிலை அடைய மலையேற்றம் செய்வது மிகவும் விசேஷம். 4 கி.மீ. தூரம் கொண்ட இந்த மலையேற்றத்தில் கடுமையான பனிப்பொழிவை நீங்கள் சந்திக்க நேரிடும்.

6. மலையேற்றமானது பாறைகள் நிறைந்த நிலப்பரப்பு, கற்களால் ஆன பாதை மற்றும் பச்சை புல்வெளிகள் ஆகியவற்றின் கலவையாகும், இது இயற்கையின் அற்புதமான காட்சியை நமக்கு பொழிகிறது.

7. துங்கநாத்திலிருந்து இமயமலைத் தொடரின் பல உயரமான சிகரங்களையும் நீங்கள் காண முடியும்.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த துங்கநாத் கோவில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சாய்ந்து வருகிறது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

More News

    Read more about: travel news tungnath uttarakhand
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+