Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நீலம்பூர் » ஈர்க்கும் இடங்கள் » நெடுங்காயம்

நெடுங்காயம், நீலம்பூர்

26

நீலம்பூர் நகரத்திலிருந்து 18 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நெடுங்காயம் பிரதேசம் இதன் அடர்த்தியான மழைக்காடுகளுக்காக பிரசித்தி பெற்றுள்ளது. இயற்கை அழகுடன் ஜொலிக்கும் இந்த வனப்பகுதியில் ஏராளமான தாவரவகைகளும் காட்டுயிர் அம்சங்களும் நிறைந்துள்ளன.

காலனிய ஆட்சியின் போது கட்டப்பட்ட மரவீடு ஒன்று இந்த நெடுங்காயம் காட்டுப்பகுதியின் சிறப்பம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. இந்த மரவீட்டிலிருந்து சுற்றிலுமுள்ள இயற்கைக்காட்சிகளையும் காட்டு உயிரினங்களின் நடமாட்டங்களையும் நன்கு பார்த்து ரசிக்கலாம்.

பசுமையாக காட்சியளிக்கும் இந்த நெடுங்காயம் வனப்பகுதியில் யானைகள், காட்டெடுருமைகள், புலி, முயல், நீலக்குரங்கு, கரடி, காட்டுப்பூனை மற்றும் மான் போன்ற விலங்குகள் வசிக்கின்றன. பாதுகாக்கப்பட்ட இடம் என்பதால், வனத்துறையினரின் முன் அனுமதி பெற்றுத்தான் இந்த காட்டினுள் பயணிகள் நுழைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நெடுங்காயத்தில் உள்ள யானைப்பயிற்சி முகாம் ஒன்று ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பயணிகளை ஈர்த்து வருகிறது. அது மட்டுமல்லாமல் இந்த நெடுங்காயம் வனப்பகுதியானது ‘நீலகிரி உயிர்ச்சூழல் பாதுகாப்பு மண்டல’த்தின் ஒரு அங்கமாகவும் விளங்குகிறது.

கேரள அரசாங்கம் தனது இரண்டாவது ‘சூழல்மாசுபடா சுற்றுலாத்திட்ட’த்திற்கான மையமாக இந்த காட்டுப்பகுதியை அங்கீகரித்துள்ளது. ஏராளமான ஒற்றையடிப்பாதைகளை கொண்டுள்ளதால் சாகச விரும்பிகள் இங்கு மலையேற்றத்திலும் ஈடுபடலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue