Search
  • Follow NativePlanet
Share

பர்பானி – ஞானிகள் அவதரித்த புண்ணிய பூமி

10

பர்பாவதிநகர் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்த பர்பானி ஸ்தலம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டமாகும். இது மராத்வாடா பிரதேசத்தின் எட்டு மாவட்டங்களில் ஒன்றாக விளங்கியதாகும். இது கடல் மட்டத்திலிருந்து 357 மீட்டர் உயரத்தில் அமைந்திருப்பதோடு இருபுறமும் பாலகாட் மலைகள் மற்றும் அஜந்தா மலைகளால் சூழப்பட்டுள்ளது.

ஹிந்து புராணிக பாரம்பரியத்தில் பர்பானி ஸ்தலம் ஒரு முக்கிய அந்தஸ்தை கொண்டுள்ளது. இது பல ஞானிகள் மற்றும் சாய் பாபா பிறந்த இடமாக புகழ் பெற்றுள்ளது. பல கோயில்களும் இந்த ஸ்தலத்துக்கு அருகாமையில் அமைந்துள்ளன.  

கோயில்களின் புனிதபூமி

பர்பானி நகரம் பிரபாவதி தேவியின் பெயரால் இப்படி அழைக்கப்படுகிறது. பிரகாசம் பொருந்திய பெண்தெய்வம் இந்த பிரபாவதி தேவியாகும். இந்த பிரதேசம் சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் நிஜாம்கள் ஆட்சியில் செழிப்படையாமலே இருந்துள்ளது.

ஏறக்குறைய 650 வருடங்கள் ஒரு வளர்ச்சியடையாத பகுதியாகவே இது இருந்துள்ளது. 1960 ம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலத்துடன் இணைக்கப்பட்ட பிறகு இது பலவகைகளிலும் முன்னேற்றமடைந்துள்ளது.

பர்பானி இங்கிருந்து 45 கி.மீ தூரத்தில் உள்ள - தத்தாத்ரேயரின் மறுபிறப்பாக அறியப்படும் சாய்பாபாஅவதரித்த ஸ்தலமான - பத்ரி  எனும் இடத்துக்காக பிரசித்தமாக அறியப்படுகிறது. மேலும் இங்கு ஜபரேஷ்வர் பேலேஷ்வர் மஹாதேவ், மோட்டா மாருதி மற்றும் பர்தேஷ்வரா போன்ற முக்கியமான ஆன்மீக கோயில்கள் அமைந்துள்ளன.

இங்கிருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ள ஜின்டூர் எனும் கிராமத்தில் உள்ள ஜயின் கோயிலும் பிரசித்தமான அம்சமாக அமைந்துள்ளது. அருகாமையில் உள்ள முத்கல் எனும் கிராமத்தில் விஷ்ணு மற்றும் சிவபெருமான் ஆகிய இரு கடவுளரும் ஒரே இடத்தில் வழிபாடு செய்யப்படுகின்றனர்.

ஸ்ரீ சாய் பாபாவின் குருவான ஸ்ரீ கேஷவ்ராஜ் பாபாசாஹேப் கோயிலும் இங்கு குறிப்பிடவேண்டிய அம்சமாகும். இந்த கோயில் பர்பானியிலிருந்து 45 கி.மீ தூரத்தில் சேலு எனுமிடத்தில் அமைந்துள்ளது.

பர்பானி சிறப்பு

பர்பானி வானிலை

சிறந்த காலநிலை பர்பானி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பர்பானி

  • சாலை வழியாக
    பர்பானி நகரத்துக்கு மஹாராஷ்டிரா மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் மாநில அரசுப்பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அரசுப்பேருந்துகளைவிட தனியார் பேருந்துகள் சௌகரியமானதாய் உள்ளன்ன. புனேயிலிருந்து பர்பானிக்கு செல்வதற்கு ஏ.சி பேருந்துக்கட்டணம் 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை இருக்கலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    மஹாராஷ்டிரா மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்து சுலபமாக பயணிக்கும் வகையில் பர்பானி நகரத்துக்கு ரயில் சேவைகள் உள்ளன. மும்பை, புனே, ஹைதராபாத், டெல்லி மற்றும் நாசிக் நகரங்களிலிருந்து தினசரி ரயில் சேவைகள் பர்பானி நகருக்கு உள்ளன. ஏ.சி அல்லது சாதாரண பெட்டிகளை தங்கள் விருப்பப்படி பயணிகள் தேர்வு செய்து கொள்ளலாம். ரயில் பயணம் சிறந்த வசதியான பயண மார்க்கமாக அமைந்துள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    பர்பானி நகரத்திற்கு அருகாமையில் 60கி.மீ தூரத்தில் நந்தேட் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து முக்கிய இந்திய நகரங்களுக்கு வாரத்துக்கு நான்கு முறை தடையற்ற விமான சேவைகள் உள்ளன. விமான நிலையத்திலிருந்து பர்பானி வருவதற்கு டாக்சிகள் கிடைக்கின்றன. இதுதவிர, மும்பையில் சத்ரபதி சிவாஜி விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து எல்லா முக்கிய இந்திய நகரங்கள் மற்றும் சர்வதேச நகரங்கள் போன்றவற்றுக்கு ஏராளமான விமான சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
01 Apr,Wed
Return On
02 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
01 Apr,Wed
Check Out
02 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
01 Apr,Wed
Return On
02 Apr,Thu