Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பத்தனம்திட்டா » ஈர்க்கும் இடங்கள் » வல்லியக்கோயிக்கல் கோயில்

வல்லியக்கோயிக்கல் கோயில், பத்தனம்திட்டா

22

பத்தனம்திட்டா நகரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அச்சன்கோயில் ஆற்றங்கரையில் வல்லியக்கோயிக்கல் கோயில் அமைந்திருக்கிறது. ஸ்ரீ தர்ம சாஸ்தா என்று அழைக்கப்படும் ஐயப்ப பகவானுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இந்தக் கோயில் பந்தளம் மகாராஜாவால் கட்டப்பட்டது ஆகும்.

பந்தளம் மகாராஜா ஒரு குழந்தையை பம்பை நதிக்கரையில் கண்டெடுத்ததாகவும், அந்த குழந்தைதான் ஐயப்பன் என்றும் புராணம் கூறுகிறது. அதன் பிறகு கடவுளின் அன்பளிப்பாக அந்த குழந்தை தனக்கு கிடைத்திருப்பதாக ஐயப்பனை பந்தளம் மகாராஜா தத்தெடுத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

வல்லியக்கோயிக்கல் கோயில் சபரிமலை ஐயப்பனை கோயிலை அடிப்படையாக கொண்டு கட்டப்பட்டுள்ளது. அதோடு சபரிமலை கோயிலில் மகரவிளக்கு தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு இந்த வல்லியக்கோயிக்கல் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மகரவிளக்கு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

அப்போது ஐயப்பனுடைய புனித ஆபரணங்களாக கருதப்படும் திருவாபரணங்களை வல்லியக்கோயிக்கல் கோயிலிலிருந்து, சபரிமலை கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். மேலும் சபரிமலை செல்லும் பயணிகள் வழியில் இந்த ஐயப்பன் கோயிலுக்கு வந்து வழிபட்டு அதன் பிறகு தங்கள் பயணத்தை தொடர்வார்கள்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Sep,Thu
Return On
11 Sep,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Sep,Thu
Check Out
11 Sep,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Sep,Thu
Return On
11 Sep,Fri