1505-ஆம் வருடம் புகழ் பெற்ற ராஜ்புட் முதன்மை அதிகாரியாக விளங்கிய ஜஸ்பால் சிங் பதானியாவால் கட்டப்பட்டதாகும் ஷாஹ்பூர் கண்டி கோட்டை. நூர்பூர் மற்றும் கங்ரா பகுதிகளை கட்டுப்பாட்டில் வைக்கவே இந்த கோட்டை கட்டப்பட்டது.
இந்த கோட்டையின் வளாகத்தில் பல அழகிய மசூதிகளும், கோவில்களும் உள்ளன. இது இதனை ஆண்ட அரசர்களின் சமய சார்பற்ற குணத்தை எடுத்துரைக்கிறது. இந்த கோட்டையில் இருந்து பார்க்கும் போதி ரவி நதி மற்றும் இமயமலையின் எழில்மிகு தோற்றம் கண் கவரும் வண்ணம் காட்சி அளிக்கும்.



Click it and Unblock the Notifications