ஜைன நாராயணா என்று உள்ளூர் மக்களால் அறியப்படும் இந்த ஜைனக்கோயில் 9ம் நூற்றாண்டில் மன்யகேடா ராஷ்டிரகூடர்களால் கட்டப்பட்டுள்ளது. திராவிட சிற்பக்கலை பாணியில் அவர்கள் இந்த கோயிலை கட்டியுள்ளனர்.
இந்த கோயில் கட்டமைப்பு மூன்று அடுக்குகலைக் கொண்ட ஒரு அடித்தள பீட அமைப்பின் மீது கட்டப்பட்டுள்ளது. இந்த பீட அமைப்பு பல நுட்பமான அலங்கார புடைப்பு மற்றும் அடுக்குகளைக்கொண்டுள்ளது. பட்டடக்கல் ஸ்தலத்தில் முக்கியமான அம்சமான இந்த கோயிலும் பயணிகள் தவறவிடக்கூடாத ஒரு அம்சமாகும்.அமோகவர்ஷா அல்லது அவரது மகன் இரண்டாம் கிருஷ்ணாவால் இந்த கோயில் கட்டுவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று பரவலாக நம்பப்படுகிறது. இந்த கோயில் மூன்று அடுக்குகளை கொண்டுள்ளது.
இவற்றில் கீழ் இரண்டு அடுக்குகள் மட்டும் பயன்பாட்டில் உள்ளன. பயணிகள் இந்த கோயிலில் ஒரு எதிர்சன்னதி, ஒரு முகமண்டபம், ஒரு மண்டபம் மற்றும் சதுர வடிவில் பிரகாரத்துடன் கூடிய கருவறை போன்றவற்றைக்காணலாம்.கோயில் வெளிப்புறத்தில் கக்ஷாசனா எனப்படும் மேல் மாடப்பகுதியில் பல தொங்கு சிற்பங்கள் காணப்படுகின்றன. நடன மாந்தர், நிதி, வியாலா மற்றும் பூர்ண கடா போன்ற சிற்பங்கள் அவற்றில் அடங்கியுள்ளன. மேலும் பாகர்களுடன் கூடிய யானைச்சிற்பங்களையும் இந்த மண்டப சுவரில் பார்க்க முடிகிறது.
மண்டப வாசலில் பூர்ண கடா சிற்பங்கள் மற்றும் சங்கநிதி – பத்மநிதி சிற்பங்களையும் காணலாம். இவை தவிர பிரம்மாண்டமான தூண்களும் அந்தரலா மற்றும் மண்டபப்பகுதியில் காணப்படுகின்றன.



Click it and Unblock the Notifications