Search
  • Follow NativePlanet
Share

பெக் - இயற்கை மற்றும் கலாச்சாரம் சங்கமிக்கும் இடம்!

6

நாகாலாந்து இந்தியாவின் அதிகம் அறியப் படாத பகுதிகளில் ஒன்று. இந்த மாநிலம் இயற்கை அன்னை தந்த கொடைகளை அதன் மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் சமவெளிகளில் சேமித்து வைத்துள்ளது. எனவே, இங்கு ஒரு முறை  வருகை புரிந்த எவரும், திரும்ப வரும் எண்ணத்தோடே இங்கிருந்து செல்கின்றனர். அத்தகைய சிறப்பு வாய்ந்த நாகாலாந்து மாநிலத்தில், இயற்கை அன்னை தன்னுடைய உன்னத படைப்புகளை பொத்தி பாதுகாத்து வரும் ஒரு உன்னத இடமாக `பெக்' விளங்குகிறது.

பெக், இயற்கை அழகு மற்றும் மற்றும் கலாச்சாரம் சங்கமிக்கும் ஒரு சிறந்த சுற்றுலா தலளமாகும். இந்த நகரம் அமைந்துள்ள மாவட்டமும் அதே பெயருடன் அழைக்கப்படுகிறது. பெக் மாவட்டம் நாகாலாந்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.

இந்த மாவட்டத்தின் கிழக்கே மியான்மரும், தெற்கில் மணிப்பூர் மாநிலமும், வடக்கில் கோஹிமா மாவட்டமும்,  மேற்கில் ஸுன்ஹிபோடோ மற்றும், துன்சாங்க் மவட்டமும் எல்லைகளாக உள்ளன். 

சிறிது காலத்திற்கு முன்பு வரை பெக் கோஹிமா மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இது கோஹிமா நகரத்தில் இருந்து 145 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

பெக் மாவட்டம் `சக்ஹெஸாங்க்', `போச்சுரி' போன்ற பழங்குடி இன மக்களின் இருப்பிடமாக உள்ளது. இதில் ஆச்சர்யமாக போச்சுரி பழங்குடி இனம் என்பது `சோக்ரி', `ஹிஸா', மற்றும் `சாங்' ஆகிய  மூன்று துணை பழங்குடியினரின்  கலவையாக உள்ளது.

ஆற்றின் அழகில் பயணிகள் இதயம் பறி போய் விடும்...

இவற்றை தவிர பெக் பள்ளத்தாக்கில் பல அரிய வகை மல்லிகைகள் காணப்படுகின்றன. பெக் பல்வேறு விலங்குகள் மற்றும் தாவரங்களின் இருப்பிடமாக உள்ளது. இங்கு `ப்ளிதின் ட்ராகோபன்' என்கிற அரிய வகை ஃபீசன்ட் காணப்படுகிறது.

மேலும் இங்கு குதோன்யே, துரின்யே, துர்ஹின்யே, நுகுன்யே, துக்ஹான்யே, மற்றும் சுக்ருன்யே போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

பெக் சிறப்பு

பெக் வானிலை

சிறந்த காலநிலை பெக்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பெக்

  • சாலை வழியாக
    பெக்கின் அனைத்து தொடர்புகளும் சாலையை மட்டும் சார்ந்து இருப்பதால், இந்த நாகாலாந்து மாவட்டத்தை அடைய சாலை மார்க்கமே மலிவான வழியாகும். கோஹிமா மற்றும் திமாபுர் உட்பட நாகாலாந்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வழக்கமான பேருந்துகள் பெக்கிற்கு இயக்கப்பட்டு வருகின்றன. இதைத் தவிர, மாநில போக்குவரத்து கழக பேருந்துகள் மற்றும் பல தனியார் பேருந்துகள் கூட பெக்கிற்கு இயக்கப்படுகின்றன. நீங்கள் பெக்கை அடைய சுற்றுலா பேருந்துகளையும் பதிவு செய்து கொள்ளலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    திமாபுர் நாகாலாந்தின் முக்கிய ரயில் நிலையம் ஆகும். ரயில் மூலம் பெக்கை அடைய வேண்டும் எனில், நீங்கள் திமாபுர் வரை ரயிலில் சென்று, அங்கிருந்து சாலை மார்கமாக பெக்கை எளிதாக அடையலாம். இது பெக்கிலிருந்து 189 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ரயில் மூலம் பெக்கை அடைவது மிகவும் மலிவானது. இங்கிருந்து பெக்கிற்கு நாகாலாந்து மாநில போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    நாகாலாந்தின் அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களை போன்று பெக்கிற்கும் சொந்த விமான நிலையம் இல்லை. திமாபுர் விமான நிலையம் தென்கிழக்கில் பெக்கிலிருந்து 184 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திமாபுர் விமான நிலையம் கவுகாத்தி மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் திமாபுர் விமான நிலையத்தில் இருந்து வாடகை டாக்சிகள் மூலம் எளிதாக பெக்கை அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed