Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » போர்பந்தர் » ஈர்க்கும் இடங்கள் » பர்டா மலை வனவிலங்குகள் சரணாலயம்

பர்டா மலை வனவிலங்குகள் சரணாலயம், போர்பந்தர்

15

இந்த வசீகரமான வனவிலங்குகள் சரணாலயம், போர்பந்தர் மற்றும் ஜாம்நகர் ஆகிய இரு மாவட்டங்களுக்கிடையில் பங்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனினும், போர்பந்தரிலிருந்து வெறும் 15 கி.மீ. தொலைவில் இந்த சரணாலயம் அமைந்திருப்பதனால், இது ஜாம்நகர் மாவட்டத்தைக் காட்டிலும் போர்பந்தர் மாவட்டத்துக்கே மிகவும் அருகாமையில் உள்ளது.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான இது, 1979 ஆம் ஆண்டில் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அழகிய பசுமையான காடுகள் மற்றும் விளைநிலங்களால் சூழப்பட்டு, மலைப்பாதைகள், சமவெளிகள் மற்றும் அழகிய சிறு சிறு நீரோடைகளைக் கொண்டிருக்கும் இது கொள்ளை கொள்ளும் அழகோடு காட்சியளிக்கிறது.

அரேபியப் பெருங்கடலில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த வனப்பகுதி, இப்பகுதியின் உப்பார்ந்த அமிழ்வுகளில் இருந்து இதனைக் காக்கும் பாதுகாப்புக் கவசமாகத் திகழ்கிறது.

ஓநாய், சிறுத்தை, வலை தோண்டி வாழும் கரடி, முதலைகள், பச்சோந்திகள், விஷப்பாம்புகள், கொண்டையுடன் கூடிய இராஜாளி வகை பருந்து, புள்ளிகள் கொண்ட பருந்து போன்ற சில அருகி வரும் விலங்கினங்கள், புள்ளினங்கள் மற்றும் ஊர்வன இச்சரணாலயத்தில் காணப்படுகின்றன.

சுமார் 192.31 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்ட இச்சரணாலயத்தில், பூப்பூக்கும் செடி வகைகள் மற்றும் மருத்துவ குணம் கொண்ட செடி வகைகள் ஏராளமானவற்றைக் காணலாம்.

இந்த எழில் கொஞ்சும் சரணாலயத்தில் தெளிந்த நீரோட்டத்துடன் விளங்கும் ஆறுகளான பிலேஷ்வரி மற்றும் ஜோக்ரி ஆகிய ஆறுகளும் காணப்படுகின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu