Search
  • Follow NativePlanet
Share

பர்வோரிம் - பறவைகளோடு கொஞ்சி விளையாடுங்கள்!

7

கோவா-மும்பை நெடுஞ்சாலையில் மாபுஸாவை கடந்த பின்பு, பனாஜியின் வாயிலிலேயே அமைந்திருக்கிறது பர்வோரிம் நகரம். இந்த நகரத்துக்கு வெகு அருகாமையிலேயே சலீம் அலி பறவைகள் சரணாலயம் உள்ளது.

அதேபோல் இந்த நகரிலிருந்து பனாஜி செல்லும் வழியில், மாண்டோவி நதியில் கரையில் ரெய்ஸ் மகோஸ் கோட்டை அழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இதுபோல் எண்ணற்ற சுற்றுலா மையங்கள் பர்வோரிம் நகருக்கு வெகு அருகமையில் இருப்பதால் பயணிகளின் கூடத்தை இந்த நகரத்தில் அதிகமாக பார்க்கலாம்.

பர்வோரிம் நகரம் சமீப காலங்களில் பொருளாதார ரீதியில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது. அதோடு இந்த நகரம் பனாஜி நகருக்கு வெகு அருகில் இருப்பதால் பனாஜியின் விரிவாக்கப்பட்ட துணை நகரமாகவே கருதப்படுகிறது.

பர்வோரிம் நகரில் உள்ள கேஜுவாரியோ மற்றும் பேஸ்ட்ரி ஷாப் என்ற இரு உணவகங்களும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகப்பிரபலம். அதோடு இந்த நகரில் பயணிகள் வசதிக்கு ஏற்ப குறைந்த விலையில் தங்குமிடங்களும் கிடைக்கும்.

பர்வோரிம் சிறப்பு

பர்வோரிம் வானிலை

சிறந்த காலநிலை பர்வோரிம்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பர்வோரிம்

  • சாலை வழியாக
    கோவாவை மும்பையிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 17 அல்லது மும்பை-கோவா நெடுஞ்சாலை மூலமாக அடையலாம். ஆனால் இந்த வழி உங்களை நீண்ட பயணத்துக்கு இட்டுச் செல்வதோடு, கொஞ்சம் ஆபத்தானதும் கூட. எனினும் மும்பையிலிருந்து புனே செல்லும் எக்ஸ்பிரஸ் வழியை பயன்படுத்தி, சதாரா நெடுஞ்சாலையை அடைந்து, அதன் பின்னர் சாவந்த்வாடியை அடைந்து விடலாம். அப்படி சாவந்த்வாடியை நீங்கள் அடைந்து விட்டால் அங்கிருந்து கோவா வருவதற்கு ஒரு சில நிமிடங்கள்தான் ஆகும். மேலும் மும்பை, புனே மற்றும் மற்ற மகாராஷ்டிர நகரங்களிலிருந்து ஏராளமான பேருந்துகள் கோவாவுக்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    இந்தியாவின் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என்று அனைத்து பகுதிகளிலிருந்தும் கோவாவுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் மும்பை மற்றும் கோவாவுக்கு இடையில் இயக்கப்பட்டு வரும் ரயில்களில் பயணம் செய்வதற்கு பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். இதற்கு இரவு நேரத்தில் பயணம் செய்வது பலருக்கு சௌகரியமாக இருப்பதே காரணம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களிலிருந்து தெற்கு கோவாவின் தபோலிம் விமான நிலையத்துக்கு எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனினும் கோவாவில் பன்னாட்டு விமான நிலையம் இல்லாத காரணத்தால், வெளிநாட்டு பயணிகள் மும்பை அல்லது டெல்லி போன்ற நகரங்களுக்கு வந்த பின்புதான் கோவாவை அடைய முடியும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed