சுற்றுலா பயணிகளை பெரிதும் கவரும் அம்சமான இந்த முல்ஷி ஏரி முல்ஷி அணை நீர்த்தேக்கம் அமைந்துள்ளதால் ஏற்பட்டுள்ளது. குடும்பத்துடன் மாலைப்பொழுதில் சிற்றுலா செல்வதற்கு மிக உகந்த இடமாக இது விளங்குகிறது.
மனதை ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் உற்சாகப்படுத்திக் கொள்ளவும் இந்த அணையின் அருகில் காணப்படும் பசுமையான மரங்களும் இயற்கைச் சூழலும் ஏதுவாக அமைந்துள்ளது.
நீர் விளையாட்டுகள், பறவை வேடிக்கை போன்ற பொழுது போக்கு அம்சங்களும் இங்குள்ள விசேஷமான அம்சங்களாகும். இங்கிருந்து பார்க்கும் போது கொரைக்காட் மற்றும் தங்காட் என்ற இரண்டு கோட்டைகளும் தூரத்தில் அழகாக தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications