எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு ஏறக்குறைய 1400 ஆண்டுகள் பழமையை உடையது இந்த பாடலேஷ்வர் கோயில். பாடலேஷ்வர் என்ற தெய்வத்தின் பெயரால் இக்கோயில் அழைக்கப்படுகிறது. அதாவது பாதாளக்கடவுள் என்பது அதன் பொருள்.
இக்கோயிலானது அதன் கட்டிடக்கலை வடிவமைப்பில் எலிபண்டா மற்றும் எல்லோரா குகைக்கோயில்களை ஒத்திருக்கிறது. இதன் ஒரு சிறப்பான அம்சம் என்னவெனில் இது ஒரே ஒரு பெரிய பாறையிலிருந்து உருவாக்கப்பட்டிருப்பதுதான். இந்த குகைக் கோயிலின் உள்ளே ஒரு அழகான சிவலிங்கம் காணப்படுகிறது.
பாடாலேஷ்வர் கோயிலை காலை 8 மணியிலிருந்து இரவு 5.30 மணி வரை பார்த்து மகிழலாம்.



Click it and Unblock the Notifications