புஷ்கர் ஏரியின் கரைகளில் அமைந்திருக்கும் பிரம்மா கோயிலை போன்று பிரம்மனுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் கோயில்களை நீங்கள் இந்தியாவின் ஒரு சில இடங்களில்தான் காண முடியும்.
ஒருமுறை புஷ்கர் நகரில் யாகம் நடத்த எண்ணிய பிரம்மா தன்னுடைய மனைவியான சாவித்திரியை துணைக்கு அழைத்தார். ஆனால் சாவித்திரியால் சரியான நேரத்துக்கு அங்கு வர முடியவில்லை.
இதன் காரணமாக பிரம்மா காயத்ரி என்ற பால் விற்பனை செய்யும் பெண்ணை அவசரமாக திருமணம் செய்து யாகத்தை மேற்கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சாவித்திரி புஷ்கர் நகரை தவிர வேறெங்கும் பக்தர்கள் உன்னை வழிபடமாட்டார்கள் என்று பிரம்மனை சபித்து விட்டதாக புராணம் கூறுகிறது.
பிரம்மா கோயில் 14-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த கோயிலில் உள்ள பிரம்மனுடைய சிலை, இடதுபுறம் இளைய மனைவி காயத்ரியுடனும், வலதுபுறத்தில் சாவித்திரியுடனும், நான்கு தலைகளுடன் தாமரை மலரில் அமர்ந்திருக்கும் கம்பீரத் தோற்றத்தை இங்கு வரும் பக்தர்கள் எவரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க மாட்டார்கள்.



Click it and Unblock the Notifications