புஷ்கர் நகரில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் பௌர்ணமி தினத்தன்று நடைபெறும் கால்நடை சந்தை உலகப் புகழ் பெற்றது. இந்த பருவத்தில் புனிதமான புஷ்கர் ஏரியில் நீராடுவதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புஷ்கர் நகரை தேடி கூட்டம் கூட்டமாக வருவார்கள்.
புஷ்கர் கால்நடை சந்தையில் மற்ற கால்நடைகளை விட ஒட்டக வியாபாரம் எப்போதும் களைகட்டி இருக்கும். மேலும் இந்த சமயங்களில் நடத்தப்படும் பொம்மலாட்டம், ஒட்டக பந்தயம் போன்ற கலாச்சார நிகழ்ச்சிகள் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம்.



Click it and Unblock the Notifications