Search
  • Follow NativePlanet
Share

ரைஸென் - ராஜகளை வாய்த்த நகரம்!

20

ரைஸென் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு சிறிய நகரங்களில் ஒன்றாகும்.  ஆனால் இதன் மத மற்றும் வரலாற்று முக்கியத்துவம் எந்த ஒரு நகரத்திற்கும் சளைத்ததல்ல. இது ரைஸென் மாவட்டத்தில் அமைந்துள்ளது . இந்த நகரமே இந்த மாவட்டத்தின் நிர்வாக தலைநகர் ஆகும். இந்த இடம் இங்கு மலைமேல் அமைந்துள்ள புகழ் பெற்ற ரைஸென் கோட்டையின் நினைவாக இந்த பெயர் பெற்றது. முந்தைய காலங்களில் இது `ராஜவாஸினி' அல்லது `ராஜஸயன்' என அழைக்கப்பட்டது. அதற்கு அரச குடியிருப்பு என அர்த்தம்.

ரைஸென் - வரலாற்றின் பார்வையில் ஒரு மறு பயணம்!

ரைஸெனின் ஒவ்வொரு மூலை முடுக்கும் வரலாற்று நிகழ்வுகளுக்கு சான்றாக உள்ளன.  கி.பி 1200-ம் ஆண்டு இந்த ரைஸென் கோட்டை கட்டப்பட்டது. அதன் பிறகே இந்த இடம் ரைஸென் என அழைக்கப்படுகிறது.

எனினும், இந்த கோட்டையானது 1760-ல், போபாலின் மூன்றாவது நவாபான புகழ்பெற்ற `ஃபியாஸ் முகம்மது கான்' வசமானது. அன்றிலிருந்து இது போபாலின் ஒரு பகுதியாக இருந்து வந்தது.

சுதந்திரத்திற்கு பிறகு, 1956-ஆம் ஆண்டு இந்த இடம் போபால் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் நவம்பர் 1, 1956 ஆம் ஆண்டு போபால் மாகாணம் மத்திய பிரதேச மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.

ரைஸெனில் பார்ப்பதற்கு என்னென இருக்கிறது?

ரைஸென் சுற்றுலா பல்வேறு  கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களை உள்ளடக்கியது.  மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள இந்த சிறிய நகரம், அதன் வரலாற்று முக்கியத்துவத்துடன் மத மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு சான்றாக இருக்கிறது.

இங்கு கோவில்களும், மசூதிகளும் அருகருகே அமைந்துள்ளன. அவை இம்மக்களின் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கு எடுத்துகாட்டாக திகழ்கின்றன. மேலும் ரைஸென் நகரின் முக்கிய சுற்றுலாப் பகுதிகளாக ஹஸ்ரத் பீர் மற்றும் ரைஸென் கோட்டை ஆகியவை அறியப்படுகின்றன.

ரைஸெனுக்கான வருகை!

ரெஸெனில் விடுமுறைய கழிப்பதற்கு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களே மிகவும் சிறந்தவை. ஏனெனில் இந்த இரண்டு மாதங்களில் தான் வானிலை மிகவும் இனிமையாக காணப்படும்.

ரைஸென் சாலை, ரயில் மற்றும் விமான மூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு அருகில் உள்ள ரயில் மற்றும் விமான நிலையம் போபால் ஆகும்.

ரைஸென் சிறப்பு

ரைஸென் வானிலை

சிறந்த காலநிலை ரைஸென்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ரைஸென்

  • சாலை வழியாக
    மத்திய பிரதேச மாநிலத்தின் அனைத்து சுற்றுலா இடங்களும் கிட்டத்தட்ட சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் மற்றும் டாக்சிகளைப் பயன்படுத்தி ரைஸென்னை வசதியாக அடையலாம். ரைஸெனுக்கு சீரான இடைவெளியில் மற்றும் நியாயமான கட்டணத்தில் மத்திய பிரதேச மாநிலப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குளிர்சாதனப் பேருந்துகளும் உள்ளன. ஆனால் அவற்றின் கட்டணம் சற்று அதிகம். டாக்சிகளைப் பயன்படுத்தி ரைஸெனை அடைவது மிகவும் எளிது, மேலும் அது வசதியானதும் கூட.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ரைஸெனுக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் போபால் ரயில் நிலையம் ஆகும். போபால் ரயில் நிலையம் நாட்டின் பிற நகரங்களுடன் வழக்கமான ரயில் சேவை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து ரைஸெனை அடைய பேருந்து மற்றும் டாக்ஸிக்கள் உள்ளன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    ரைஸெனுக்கு அருகில் போபால் விமான நிலையம் சுமார் 48 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. போபால் விமான நிலையம் நாட்டின் அனைத்து முக்கிய விமான நிலையங்களுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையதிலிருந்து ரைஸென்னை அடைய டாக்ஸி மற்றும் பேருந்து வசதிகள் உள்ளன. அவற்றின் கட்டணமும் மிகவும் மலிவுதான்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
26 Apr,Sun
Return On
27 Apr,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
26 Apr,Sun
Check Out
27 Apr,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
26 Apr,Sun
Return On
27 Apr,Mon