Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ராஜமுந்திரி » ஈர்க்கும் இடங்கள் » சித்ராங்கி பவன்

சித்ராங்கி பவன், ராஜமுந்திரி

25

சித்ராங்கி பவன் என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை கீர்த்தி பெற்ற சாளுக்கிய மன்னரான ராஜ ராஜ நரேந்திராவின் இரண்டாவது மனைவியான சித்ராங்கி என்பவருக்காக கட்டப்பட்ட அரண்மனையாகும்.

கோதாவரி ஆற்றங்கரையில் அமைதி தவழும் சூழலில் கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த அரண்மனையைப்பற்றி ஏராளமான கதைகள் சொல்லப்படுகின்றன. புகழ்பெற்ற சலாம் இருப்பிடத்துக்கு அருகிலேயே இந்த அரண்மனை உள்ளது.

வழங்கப்பட்டு வரும் கதைகளின்படி, இந்த சித்ராங்கி ராணி முதலில் ராஜராஜ நரேந்திர மன்னரின் இளவரசரை மணமுடிப்பதாக இருந்து பின்னர் சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக மன்னருக்கே இரண்டாவது மனைவியானார்.

இருப்பினும் இளவரசர் மீது மோகம் கொண்டிருந்த இந்த ராணி அவரை இந்த அரண்மனைக்கு மன்னர் இல்லாத நேரத்தில் வரவழைத்து தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். இளவரசரோ ராணியின் விருப்பத்திற்கிணங்க மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரமுற்ற சித்ராங்கி ராணி இளவரசர் தன்னை கெடுத்துவிட்டார் எனும் பெரும் பழியை அவர் மீது சுமத்தினார். அந்த பழியை நம்பிய அரசரும் இளவரசருக்கு தண்டைனையாக அவரது இரு கரங்களையும் துண்டிக்கச்செய்து விட்டார். இப்படியாக இந்த அரண்மனை குறித்த கதை சொல்லப்படுகிறது.

கதை உண்மையோ பொய்யோ, பழமையான புராதனத்தோற்றத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த அரண்மனைக்கு மறக்காமல் விஜயம் செய்து பார்த்து ரசிப்பது நல்லது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Sep,Wed
Check Out
10 Sep,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu