கம்பலா டேங்க் மற்றும் கம்பலா சௌல்ட்ரி என்று அழைக்கப்படும் இந்த இரண்டு குளங்கள் 1845ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளன. கம்பம் நரசிங்கராவ் பன்ட்லு என்பவர் கம்பலா சௌல்ட்ரி எனும் குளத்தை ஹிந்துக்கள் ஈமச்சடங்குகள் செய்வதற்காகவே கட்டியுள்ளார்.
அதே காலத்தில் கட்டப்பட்ட கம்பலா டேங்க் எனும் குளம் கம்பலா செருவு அல்லது கம்பம் வாரி செருவு என்று அழைக்கப்படுகிறது. கம்பலா குளத்திற்காக வெட்டியெடுக்கப்பட்ட மண்ணிலிருந்துதான் கம்பலா சௌல்ட்ரிக்கான கரைகள் கட்டப்பட்டிருக்கின்றன.
பின்னாளில் இந்த குளத்தை ஒரு ஸ்டேடியமாக மாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டபோது உள்ளூர் மக்களின் எதிர்ப்பு காரணமாக அது கைவிடப்பட்டது. தற்போது இந்த குளப்பகுதியை ஒரு பொழுதுபோக்கு ஸ்தலமாக மாற்றும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications