மரேடிமல்லி ஈகோ- டூரிஸம் எனும் இயற்கைப்பூங்கா வளாகம் பலவிதமான இயற்கை அம்சங்களுடன் பயணிகளை வரவேற்கிறது. ராஜமுந்திரிக்கு சுற்றுலா மேற்கொள்ளும்போது இந்த இயற்கைப்பூங்காவுக்கு மறக்காமல் விஜயம் செய்வது சிறந்தது.
மரேடிமல்லி ஈகோ-டூரிஸம் பூங்கா ராஜமுந்திரியிலிருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ளது. இயற்கைச்சுழல் சுற்றுலா மற்றும் நாட்டுப்புறச்சூழல் பாதுகாப்பு ஆகிய இரண்டு நோக்கங்களுடன் இந்த பூங்காத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் வளமுரே கிராமம் மற்றும் அதைச்சூழ்ந்துள்ள வனப்பகுதி ஆகியவை உள்ளடங்கியுள்ளது. இவ்விரண்டும் மரேடிமல்லி மண்டலத்தின் கீழ் வருகின்றன. மரேடிமல்லி இயற்கைப்பூங்காவில் மலையேற்றத்தில் ஈடுபடுவதற்கான பொருத்தமான சூழல் காணப்படுகிறது.
காட்டுப்பகுதியின் வழியே மலையேற்றத்தில் ஈடுபடுவது இயற்கை ரசிகர்களுக்கும், சாகச விரும்பிகளுக்கும் பரவசத்தை தரக்கூடிய அனுபவமாக இருக்கும். மேலும் இந்த வனப்பகுதியில் ஓடும் வற்றாத ஓடைகள் பிரம்மாண்ட பாறைகளின் வழியே ஓடிவருவது கண்கொள்ளாக்காட்சியாகும்.
காட்டுப்பகுதியின் அமைதியும், பசுமைச்சூழலும், ஓடைகளும் பயணிகளுக்கு மறக்கவியலாத ஒரு அனுபவத்தை தர இங்கு காத்திருக்கின்றன. பல நீர்வீழ்ச்சிகள் மற்றும் விடுமுறைவிடுதிகள் (ரிசார்ட் விடுதிகள்) ஆகியவற்றுக்கும் இந்த இயற்கைப்பூங்கா பிரசித்தி பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications