ராஜமுந்திரி நகரத்திலிருந்து 40 கி.மீ தூரத்தில் இந்த பட்டிசீமா என்ற இடம் உள்ளது. அழகான இந்த பிரதேசத்தில் வீற்றுள்ள இரண்டு கோயில்களுக்காக இது புகழ் பெற்று அறியப்படுகிறது.
இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள்/இயக்குனர்கள் மத்தியிலும் இது பிரசித்தமான ஸ்தலமாக விளங்குகிறது. கோதாவரி ஆற்றின் மையத்திலுள்ள ஒரு மலையில் வீற்றிருக்கும் வீரபத்ரா கோயில் இந்த பட்டிசீமாவின் முக்கிய விசேஷமாக பெயர் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
சிவபெருமானுக்கான இந்த கோயிலில் ஒரு பெரிய பத்ரகாளி சிலை ஆயுதபாணியாக காட்சியளிக்கிறது. பட்டிசீமாவில் உள்ள மற்றொரு கோயில் பாவநாராயண ஸ்வாமிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வருடமுழுதும் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலை நாடி வருகை தருகின்றனர்.



Click it and Unblock the Notifications