ஸ்ரீ பால திரிபுரசுந்தரி கோயில் என்றழைக்கப்படும் இந்த ஆன்மீகத்திருத்தலம் ராஜமுந்திரி நகரத்திலுள்ள முக்கியமான புண்ணிய யாத்திரை ஸ்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது.
கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இக்கோயிலின் முக்கியத்துவம் காரணமாக ராஜமுந்திரி நகரம் ‘தட்சிண காசி’ என்று அழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. 200 ஆண்டுகளுக்கு முன்னால் விஸ்வேஸ்வர பஹவான் இந்த கோயிலில் காட்சியளித்ததாக ஐதீகமாக நம்பப்படுகிறது.
உள்ளூர் மற்றும் வெகு தூரங்களிலிருந்தும் பக்தர்கள் வருடமுழுவதுமே விஜயம் செய்தவண்ணம் உள்ளதால் இக்கோயில் எப்போதுமே பரபரப்பான ஆன்மீக சூழலுடன் காட்சியளிக்கிறது. ஸ்ரீ பால திரிபுரசுந்தரி கோயிலில் வேண்டிக்கொண்டால் எண்ணியதெல்லாம் கூடும் என்பதாக பக்தர்கள் மத்தியில் பரவலாக ஐதீக நம்பிக்கை நிலவுகிறது.
ராஜமுந்திரி நகரத்திலுள்ள முக்கியக்கோயில்களின் ஒன்றான இது குறிப்பிடத்தக்க வரலாற்று பின்னணியையும் கொண்டுள்ளது. பல திருவிழாக்கள் இந்த கோயிலில் வருடமுழுவதும் கொண்டாடப்படுகின்றன. இந்த கோயிலுக்கு வருடத்தின் எந்த நாளிலும் விஜயம் செய்து வணங்கி மகிழலாம்.



Click it and Unblock the Notifications