ராஜ்கோட் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள ராஜ்குமார் கல்லூரி நாட்டிலேயே மிகவும் பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். கத்தியவார் பகுதியின் இளவரசர்களை சிறந்த ஆட்சியாளர்களாகவும், பண்பட்ட மனிதர்களாகவும் உருவாக்கும் பொருட்டாக ஏற்படுத்தப்பட்ட இந்த கல்லூரி ஆங்கிலேய அரசின் ஒரு ஆணையின் மூலம் 1868-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டு, 1870-ம் ஆண்டு முறைப்படி துவங்கப்பட்டது.
26 ஏக்கர்கள் பரப்பளவில், பழைய இந்தியாவின் அழகிய காட்சிகளைக் காட்டும் அற்புதமான கட்டிடங்களுடன், RKC என்ற பெயரில் உள்ளூரில் பிரபலமாக இருக்கும் இந்த கல்லூரியில் சென்னை மாகாணத்தின் முதல் கவர்னராக இருந்த கிருஷ்ண குமார் சிங் பாவ்சிங், 2008-ம் ஆண்டின் மும்பை தாக்குதலின் போது கொல்லப்பட்ட மும்பை போலீஸின் கிழக்குப் பகுதியின் துணை ஆணையர் அசோக் காம்டே, கிரிக்கெட் வீரர் குமார் சிங் துலீப்சிங்ஜீ மற்றும் கவிஞர் கவி கலாபி ஆகிய புகழ் பெற்ற மனிதர்கள் படித்துள்ளனர்.



Click it and Unblock the Notifications